ரோகித் சர்மா காட்டிய கறார்.. வேறு வழியில்லாமல் மாற்றி கொண்ட ராகுல்.. இப்படி உளறிட்டீங்களே பாஸ்
கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருந்து தற்போது விக்கெட் கீப்பராக மாறிய கே எல் ராகுல் ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்கு எப்போதும் ஆளாக கூடியவர்.
பல்வேறு திறமைகள் ராகுலிடம் இருந்தாலும் சில கவனக்குறைவான பேட்டிங்கால் ரசிகர்கள் இவரை பஞ்சிங் பேக் போல் மாற்றி விடுவார்கள்.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாறிய நிலையில், கே எல் ராகுலின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. இது குறித்து ராகுல் பேசுவதை தற்போது பார்க்கலாம்.

300 ரன்கள் பிட்ச்
இந்த ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்ய அவ்வளவு எளிதாக இல்லை. அதேசமயம் பேட்டிங்கிற்கு மிகவும் கடுமையாகவும் செயல்படவில்லை. பந்துவீச்சாளர்களும் பங்களிக்கும் வகையில் இந்த ஆடுகளம் இருந்தது. முதலில் நாங்கள் ஆட்டத்தை தொடங்கிய போது 300 ரன்கள் அடிக்க கூடிய பிட்ச் என நினைத்தோம். அதன் பிறகு பந்து சரியாக பேட்டிங்கிற்கு வரவில்லை. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியை 215 ரன்களுக்குள் சுருட்டினார்கள்.

நெருக்கடி தந்தார்கள்
எங்களுடைய தொடக்க வீரர்களும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்கள். எனினும் இலங்கை வீரர்கள் அபாரமாக செயல்பட்டு எங்களுடைய விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களுக்கு அதிக அளவில் நெருக்கடி கொடுத்தார்கள். நிச்சயமாக இது சவாலான போட்டியாக அமைந்தது .நாங்கள் போராடிய விதம் நினைத்து பெருமைப்படுகிறேன். முதல் ஆட்டத்தில் ஆடுகளம் சிறப்பாக இருந்தது. நாங்கள் 20, 25 ரன்கள் கூடுதலாக எடுக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எந்த பந்துவீச்சாளர் என்று பார்க்காமல் அதிரடியாக விளையாடி விக்கெட்டுகளை இழந்தோம்.

நிம்மதியாக இருக்கலாம்
ஆனால் இன்றைய ஆட்டத்தில் அழுத்தத்தை உள்வாங்கி எந்த பந்துவீச்சாளர்களை பார்த்து விளையாட வேண்டும் என்று திட்டத்தை வகுத்து விளையாடினோம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் அதிரடியாக ஆட வேண்டிய அவசியம் இல்லை. பேட்டிங் வரிசையில் நம்பர் ஐந்தாவது இடத்தில் விளையாடுவது உண்மையில் மகிழ்ச்சியை தான் கொடுக்கிறது. ஏனென்றால் தொடக்க வீரராக விளையாடும் போது நீங்கள் அவசரமா அவசரமாக பேட்டிங் செய்ய செல்ல வேண்டும். ஆனால் இப்போது நீங்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

சுழற்பந்துவீச்சு
காலை ஒய்யாரமாக போட்டு உட்கார்ந்து விட்டு, பிறகு குளித்து நன்றாக சாப்பிட்டு அதன் பிறகு அணி நம்மை எவ்வளவு வேகமாக விளையாட சொல்கிறதோ அந்த ஸ்ட்ரைக் ரெட்டுக்கு தகுந்தார் போல் விளையாடலாம். நான் பெரும்பாலும் அணி என்னை எப்படி விளையாட சொல்கிறதோ அதற்கு ஏற்றார் போல் தான் என்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்கிறேன். ஐந்தாவது வீரராக நான் சுழற் பந்துவீச்சை அதிகமாக எதிர்கொள்ள வேண்டும் எனவே அதற்கு தகுந்தார் போல் என்னுடைய மனநிலையை மாற்றிக் கொள்வேன்.

ரோகித் சொல்விவிட்டார்
ரோகித் சர்மா என்னிடம் தெளிவாக கூறிவிட்டார்ம் அவர் என்னை பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் தான் விளையாட வேண்டும் என்று கூறிவிட்டார். இதனால் அதற்கு தகுந்தார் போல் என்னை நான் மாற்றிக் கொண்டேன் என்று ராகுல் கூறியுள்ளார். கேப்டனும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். இதனால் எந்த நெருக்கடியையும் இன்றி என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட முடிந்தது.


Click it and Unblock the Notifications