Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி செய்வதில் பாதியை செய்தால் போதும்.. இளம் வீரர்களுக்கு அட்வைஸ்.. பதக்கத்தை தூக்கிய கிங்!

பெங்களூர்: நட்சத்திர வீரர் விராட் கோலி செய்யும் ஃபீல்டிங்கில் பாதியை மற்ற வீரர்கள் செய்தாலே இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் கூறியுள்ளார்.

"ஒரு பேட்ஸ்மேன் ரன் அடிக்கலாம், அடிக்காம போகலாம்.. ஆனால் ஒரு பிளேயர் ஒவ்வொரு போட்டியிலும் மிகச்சிறந்த ஃபீல்டிங்கை வெளிப்படுத்தியாக வேண்டும்" இந்திய முன்னாள் கேப்டன் தோனி கூறிய வார்த்தைகள் இது. களத்தில் ஃபீல்டிங்கில் எந்த வீரர் சொதப்பினாலும் தோனியின் முகத்தில் நிச்சயம் கோபத்தை பார்க்க முடியும். கடந்த ஐபிஎல் சீசனில் துவம் துபே ஒரு கேட்சை கோட்டைவிட்டதற்காக, உடனடியாக ஓய்வறைக்கு அனுப்பினார் தோனி.

India vs Afghanistan : Indian Player Virat Kohli won the best Fielder of the Series against Afghanistan announced fielding Coach T Dilip

அந்த வகையில் 35 வயதானாலும் ஃபீல்டிங் என்று வந்துவிட்டால் கில்லியாக இருக்கிறார் விராட் கோலி. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டு விராட் கோலி மேஜிக்கை நிகழ்த்தி கொண்டிருந்தார். சிக்ஸ்-க்கு சென்ற பந்தை தாவி பிடித்து உள்ளே வீசியது, கிட்டத்தட்ட ஒரு 30 அடிகள் ஓடிச்சென்று கேட்ச் பிடித்தது, சூப்பர் ஓவரில் குல்புதீனை ரன் அவுட் செய்தது, த்ரோவை சரியான வீரருக்கு அளித்தது என்று அத்தனையும் விராட் கோலியின் ஃபீல்டிங்கிற்கு சான்று.

இந்த நிலையில் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், ஒவ்வொரு தொடருக்கு பின்னரும் சிறந்த ஃபீல்டருக்கு பதக்கம் அளித்து வருகிறார். அந்த வகையில் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை விராட் கோலி தட்டி சென்றுள்ளார். அதற்கு முன் விராட் கோலி குறித்து பயிற்சியாளர் திலீப் பேசுகையில், இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் மிகச்சிறப்பாக ஃபீல்டிங் செய்தனர். அதேபோல் இந்த தொடரில் பார்த்தோமென்றால் 2 பேர் தொடர்ந்து சீரான ஃபீல்டிங்கை செய்து வந்துள்ளனர்.

அதில் ஒருவர் ரிங்கு சிங், மற்றொரு வீரர் விராட் கோலி. உலகக்கோப்பை தொடரின் 2 முறை சிறந்த ஃபீல்டருக்கான விருதை விராட் கோலி வென்றார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் செய்ய வேண்டாம் என்று ஷார்ட் லெக் மற்றும் ஃபைன் லெக் திசையில் ஃபீல்டிங் செய்ய விருப்பம் தெரிவித்தார். உலகக்கோப்பையில் சிறந்த ஃபீல்டராக இருக்க வேண்டும் என்று சொல்லியதோடு, செய்து காட்டினார்.

ஃபீல்டிங்கின் போது அவரின் வேலையையும் மட்டும் விராட் கோலி செய்யவில்லை. மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிக்கிறார். அவரை பார்த்து இளம் வீரர்களும் கற்று கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். விராட் கோலி செய்யும் ஃபீல்டிங்கில் பாதியை மற்ற வீரர்கள் செய்தாலே, இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Thursday, January 18, 2024, 19:12 [IST]
Other articles published on Jan 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+