Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பு பண்ணிட்டோமே! ரோகித்தின் வெறி ஆட்டத்தை பார்த்து புலம்பும் மும்பை இந்தியன்ஸ்..முழிக்கும் அம்பானி

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி நான்கு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதற்கு முக்கிய காரணம் கேப்டன் ரோகிக் சர்மாவின் அபார ஆட்டம் தான்..

இந்திய அணி 22 ரன் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்கு இழந்து தடுமாறியது. இந்தத் தொடரில் ரோஹித் சர்மா ஒரு ரன் கூட எடுக்காமல் தொடர்ந்து இரண்டு முறை டக் அவுட் ஆனார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நாம் எடுத்த முடிவில் தவறு இல்லை என்று சந்தோஷத்தில் இருந்தது.

India vs afghanistan - Rohit sharma remarkable innings made mumbai indians in dilema


கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அந்த இடத்திற்கு வந்தது ரோகித் ரசிகர்களை கடுப்படையை செய்தது. ஆனால் ரோகித் சர்மா தொடர்ந்து இரண்டு முறை டக் அவுட் ஆனது நாங்கள் சரியாகத்தான் முடிவு எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுத்தது.


ரோகித் சர்மாவை கடுப்பேற்றும் விதமாக மும்பை அணி போஸ்டரில் கூட அவருடைய புகைப்படமே இல்லாமல் கூட இருந்தது. இந்த நிலையில் ரோகித் சர்மா தன்னுடைய முரட்டு காம்பேக் ஒன்றை கொடுத்திருக்கிறார். 69 பந்துகளை எதிர் கொண்டு 121 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் 11 பவுண்டரிகளின் எட்டு சிக்ஸர்களும் அடங்கும்.


இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் ரோகித் சர்மாவின் இன்றைய ஆட்டம் ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது. இந்த ஆட்டத்தை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணத்தை கொண்டு வந்திருக்கிறது. ரோகித் சர்மா பேட்டிங்கில் எப்போதுமே ஒரு ஹிட்மேன் தான் என்பது நிரூபிக்கும் விதமாக தனி ஆளாக அணியின் தலைவிதையே மாற்றினார்.


அபாரமாக ஜோடி சேர்ந்து கடைசி ஐந்து ஓவரில் மட்டும் 103 ரன்கள் குவிக்க உதவினார். மேலும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியும் சிறப்பாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தின் மூலம் இனி ரோகித் சர்மாவை எப்படி கையாள போகிறோம் என்று மும்பை அணி நிர்வாகம் முழித்து வருகிறது.

Story first published: Thursday, January 18, 2024, 6:00 [IST]
Other articles published on Jan 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+