For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவை பற்றி தெரிஞ்சும்.. அந்த தப்பை பண்ணிட்டோம்.. பாடம் கற்றோம் ஆப்கானிஸ்தான் கேப்டன் கருத்து

டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வென்று இருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டு இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி இந்த இலக்கை 35 ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது.

India vs afghanistan world cup match - Afghan captain speaking about loss

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் நீளமானது என்று எங்களுக்கு தெரியும். இதனால் 300 ரன்கள் மேல் அடிக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அதிக விக்கெட் இழந்தோம்.

ஆனால் ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவித்து எதிரணியை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால் எங்களால் அதிக ரன்களை குவிக்க முடியவில்லை.

மூன்று விக்கெட்டுகள் நாங்கள் விரைவில் இழந்தவுடன் அஸ்மதுல்லாவிடம் நான் இதை தான் கூறினேன்.எதை நினைத்தும் கவலைப்படாதே ! டாட் பாலாக இருந்தாலும் பரவாயில்லை.நாம் ஆட்டத்தின் இறுதியில் அதனை சரி கட்டிக் கொள்ளலாம் என்று கூறினேன். எங்களுடைய குறிக்கோள் பார்ட்னர்சிப்பை அமைப்பதில் தான் இருந்தது.

பரவாயில்லை இன்னும் ஏழு ஆட்டங்கள் எஞ்சியிருக்கிறது இந்த ஏழு ஆட்டங்களையும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். குறிப்பாக எங்களுடைய தவறில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்வோம். நிச்சயமாக வெற்றிக்கு போராடுவோம் என அஸ்மதுல்லா கூறினார். இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஒரு நாள் போட்டிகளில் இதுதான் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய 199 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 272 ரன்கள் குவித்து இருக்கிறது.

Story first published: Wednesday, October 11, 2023, 23:49 [IST]
Other articles published on Oct 11, 2023
English summary
India vs afghanistan world cup match - Afghan captain speaking about loss இந்தியாவை பற்றி தெரிஞ்சும்.. அந்த தப்பை பண்ணிட்டோம்.. பாடம் கற்றோம் ஆப்கானிஸ்தான் கேப்டன் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+