Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மா - விராட் கோலி சேர்ந்தா ஆஸி.க்கு ஆபத்து.. நிரூபிக்கும் சாதனை பட்டியல்!

ஹைதராபாத் : முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா கூட்டணி புதிய சாதனை ஒன்றை செய்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி சார்பாக சிறப்பாக செயல்பட்ட கூட்டணி என்ற பெருமையை, இரண்டு முக்கிய சாதனைகள் மூலம் ரோஹித் சர்மா - விராட் கோலி பெற்றனர்.

தவான் அதிர்ச்சி அளித்தார்

தவான் அதிர்ச்சி அளித்தார்

முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 236 ரன்கள் அடிக்க, அடுத்து இந்தியா சேஸிங் செய்தது. தவான் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து கோலி - ரோஹித் சேர்ந்து அணியை மீட்டனர்.

என்னது... கோலி 4வது வீரராக விளையாடணுமா? முட்டாள்தனம்... ரவி சாஸ்திரியை காய்ச்சிய அஜித் அகர்க்கர்

ரோஹித் - கோலி கூட்டணி

ரோஹித் - கோலி கூட்டணி

ரோஹித் - கோலி இணைந்து 76 ரன்கள் சேர்த்தனர். கோலி 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிதானமாக ரன் குவித்து வந்த ரோஹித் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த 76 ரன்கள் கூட்டணியில் ரோஹித் 30 ரன்கள் சேர்த்து இருந்தார்.

ஏழாவது முறை

ஏழாவது முறை

இந்த கூட்டணி மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏழாவது முறையாக ரோஹித் சர்மா - கோலி இணைந்து 50+ ரன்கள் சேர்த்துள்ளனர். இந்திய அளவில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக 50+ ரன்கள் எடுத்த கூட்டணி ரோஹித் - கோலி தான். ஆஸ்திரேலிய அணிக்கு ஆபத்தான கூட்டணியாக மாறி வருகிறது இந்த இணை.

2ஆம் இடத்தில் யார்?

2ஆம் இடத்தில் யார்?

அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா - தவான் இணை உள்ளது. இவர்கள் இதுவரை ஆறு முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 50+ கூட்டணி அமைத்துள்ளனர். இன்னொரு விஷயத்திலும், ரோஹித் - தவான் கூட்டணியை, ரோஹித் - கோலி கூட்டணி முந்தியுள்ளது.

ரன்களும் அதிகம்

ரன்களும் அதிகம்

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த கூட்டணி ரோஹித் - கோலி தான். முதல் போட்டியுடன் சேர்த்து 934 ரன்கள் குவித்துள்ளது இந்த கூட்டணி. ரோஹித் - தவான் கூட்டணி 927 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

பெரிய கூட்டணி

பெரிய கூட்டணி

முதல் போட்டியில் ரோஹித் - கோலி கூட்டணி இரண்டு சாதனைகள் செய்த போதும், பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், தோனி - கேதார் ஜாதவ் அமைத்த அசைக்க முடியாத 141 ரன்கள் கூட்டணி தான்.

இரண்டாம் ஒருநாள் போட்டி

இரண்டாம் ஒருநாள் போட்டி

இரண்டாம் ஒருநாள் போட்டி நாக்பூரில் நாளை (மார்ச் 5) அன்று நடைபெற உள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்று ஐந்து போட்டிகள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாம் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெறுமா?

Story first published: Monday, March 4, 2019, 12:50 [IST]
Other articles published on Mar 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+