For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னது... கோலி 4வது வீரராக விளையாடணுமா? முட்டாள்தனம்... ரவி சாஸ்திரியை காய்ச்சிய அஜித் அகர்க்கர்

மும்பை:உலக கோப்பையில் கேப்டன் விராட் கோலியை 4ம் நிலையில் களமிறக்கலாம் என்ற தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் யோசனை முட்டாள்தனமானது என்று முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்க்கர் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.

உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கு அனைத்து அணிகளும் தங்களை தயார் படுத்தி வருகின்றன. அணியில் யார், யாரை இடம்பெற வைக்கலாம், எந்த ஆர்டரில் களம் இறக்கலாம் என்று விவாதங்களும் போய் கொண்டிருக்கின்றன.

அதில், முக்கியமாக இந்திய அணியின் நிலைப்பாடு குறித்து மற்ற அணிகள் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளன. இந் நிலையில், உலக கோப்பையில் கேப்டன் விராட் கோலியை 4ம் நிலையில் களமிறக்கலாம் என்ற தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் யோசனை தெரிவித்திருந்தார்.

சூப்பர்.. உலக மல்யுத்தத்தில் புனியா தங்கம்.. அபிநந்தனுக்கு அர்ப்பணிப்பு.. மெய்சிலிர்த்த தேசப்பற்று சூப்பர்.. உலக மல்யுத்தத்தில் புனியா தங்கம்.. அபிநந்தனுக்கு அர்ப்பணிப்பு.. மெய்சிலிர்த்த தேசப்பற்று

ரவி சாஸ்திரி மீது புகார்

ரவி சாஸ்திரி மீது புகார்

அவரது இந்த யோசனை தற்போது புகைச்சலை கிளப்பி இருக்கிறது. ரவி சாஸ்திரி கருத்துக்கு கோலியும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால்... சாஸ்திரியின் இந்த யோசனைக்கு சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் அஜித் அகர்க்கர்.

32 சதம்

32 சதம்

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:எண்கள் என்ன கூறுகின்றன என்பதை சிந்தியுங்கள், விராட் கோலி 32 சதங்களை 3ம் நிலை ஆட்டக்காரராக களத்தில் இறங்கி எடுத்துள்ளார். 4ம் நிலையில் கோலி 1744 ரன்களை 58 ரன்கள் என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார்.

4ம் நிலை ஆட்டம்

4ம் நிலை ஆட்டம்

4ம் நிலையிலும் நன்றாக விளையாடி இருக்கிறார். ஆனால் 4ம் நிலையில் கோலி இறங்கக் கூடாது. ஒரு பேட்ஸ்மென் தன் வாழ்நாளின் சாதனைகளையெல்லாம் ஒன்டவுனில் இறங்கி செய்துள்ளார், அவரது மகத்துவமே இந்த டவுனில்தான் வந்துள்ளது.

முட்டாள்தனமானது

முட்டாள்தனமானது

ஆகவே இவரைப்போய் இன்னும் கீழே இறங்கச் சொல்வது சரியல்ல.. 4ம் நிலையிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் ஏற்கெனவே நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் அவரை அந்த நிலையில் இருந்து இன்னும் கீழே இறக்குவது முட்டாள்தனம்.

கவலை

கவலை

முதல் 3 வீரர்களின் ஆட்டம் தான் இந்திய அணியின் வெற்றிகளைப் பெரும்பாலும் தீர்மானித்துள்ளது. அணியின் மிடில் ஆர்டர்தான் கவலை அளிக்கிறது என்று அஜித் அகர்க்கர் கூறியிருக்கிறார்.

Story first published: Monday, March 4, 2019, 12:47 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
It would be silly to push down Virat Kohli to No.4 says Ajit Agarkar on Ravi Shastri's idea for World Cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X