For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை இந்தியன்ஸ்-ஐ வைத்து உசுப்பேற்றிய ஆஸி கேப்டன்.. புன்னகை செய்து சமாளித்த ரோஹித்

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், ரோஹித் சர்மாவை உசுப்பேற்ற முயற்சி செய்து தோல்வி அடைந்தார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். அவர் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அவரை சீண்ட முயற்சி செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.

ரோஹித், ரஹானே பேட்டிங்

ரோஹித், ரஹானே பேட்டிங்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்க்ஸில் மாயன்க், கோலி அரைசதமும், புஜாரா சதமும் அடித்தனர். அடுத்து ரோஹித் சர்மா, ரஹானே பேட்டிங் ஆடி வந்தனர்.

டிம் பெய்ன் பேச்சு

டிம் பெய்ன் பேச்சு

அப்போது இந்த ஜோடியை பிரிக்க முயற்சி செய்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ரோஹித் சர்மா பேட்டிங் செய்த போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டே அருகே நின்றிருந்த சக வீரர் ஆரோன் பின்ச்சிடம் ஐபிஎல் அணிகள் பற்றி பேச்சுக் கொடுத்தார்.

எந்த ஐபிஎல் அணி?

டிம் பெய்ன், "ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் இரண்டில் எந்த அணியை ஆதரிக்கலாம் என எனக்கு குழப்பமா இருக்கு. இப்ப ரோஹித் மட்டும் சிக்ஸ் அடிச்சா நான் மும்பை இந்தியன்ஸ் அணியை தான் ஆதரிப்பேன்" என கூறினார்.

ரோஹித் புன்னகை

இதை கேட்ட ரோஹித் சர்மா சிக்ஸ் அடிக்க முற்படாமல் புன்னகையுடன் பேட்டிங்கில் கவனம் செலுத்தினார். அப்போதும் விடாத டிம் பெய்ன், பின்ச்சிடம் ஐபிஎல் அணிகள் பற்றி பேசிக் கொண்டே இருந்தார்.

பெங்களூர் அணி தவிர

பெங்களூர் அணி தவிர

பின்ச்சிடம் பேசிய டிம் பெய்ன், "நீ கிட்டத்தட்ட எல்லா ஐபிஎல் அணியிலும் ஆடியாச்சு" என்றார். பின்ச், "பெங்களூர் தவிர.." என்றார். பெய்ன், "ஓ.. பெங்களூர் தவிர?" என கேள்வி எழுப்பினார்.

ரோஹித் அரைசதம்

ரோஹித் அரைசதம்

இந்த பேச்சுக்களை ஒருவாறு சமாளித்த ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 63 ரன்கள் அடித்து ரோஹித் ஆட்டமிழக்காமல் இருந்த போது கோலி டிக்ளர் செய்தார். அப்போது இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து இருந்தது.

முதலில் ஆரம்பித்தது யார்?

முதலில் ஆரம்பித்தது யார்?

ஆஸ்திரேலிய கேப்டன் பண்றது கொஞ்சம் ஓவரா இருக்கே என நாம் நினைத்தால், இதை முதலில் ஆரம்பித்து வைத்ததே இந்திய கேப்டன் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான். முதல் போட்டியில் அமைதியாக இருந்த டிம் பெய்ன் இரண்டாம் போட்டியில் கோலியின் சீண்டல்களுக்கு பதிலடி கொடுத்தார். மூன்றாவது போட்டியில் ரிஷப் பண்ட் செய்த வேலையை செய்து வருகிறார்.

Story first published: Thursday, December 27, 2018, 17:23 [IST]
Other articles published on Dec 27, 2018
English summary
India vs Australia : Tim Paine banters Rohit Sharma by using Mumbai Indians
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+