Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 செஞ்சுரி.. 3 மேட்ச்.. தோனி, ரோஹித், சச்சின் ரெக்கார்டு காலி.. கோலியின் அடுத்த சம்பவம்!

சிட்னி : விராட் கோலி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் மூன்று முக்கிய வீரர்களின் சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நவம்பர் 27 முதல் துவங்க உள்ளது.

அந்த தொடரில் தோனி, ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் போன்ற முன்னணி வீரர்களின் சாதனைகளை அவர் ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடக்க உள்ள ஒருநாள் தொடர் நவம்பர் 27 அன்று துவங்குகிறது. இது மூன்று போட்டிகள் கொண்ட சிறிய தொடராகும். அதைத் தொடர்ந்து டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

சாதனைகள்

சாதனைகள்

இந்த சிறிய ஒருநாள் தொடரில் தோனியின் கேப்டன்சி சாதனை, சச்சின், ரோஹித் சர்மாவின் அதிக சதம் அடித்த சாதனைகளை கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அவர் அதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோஹித்தை முந்த வாய்ப்பு

ரோஹித்தை முந்த வாய்ப்பு

இந்த தொடரில் ரோஹித் சர்மா இடம் பெறாத நிலையில், அவரது அதிக சதம் அடித்த சாதனையை முந்தும் வாய்ப்பை பெற்றுள்ளார் விராட் கோலி. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் 40 போட்டிகளில் ஆடி 8 சதம் அடித்துள்ளனர்.

முதல் இடத்தில்..

முதல் இடத்தில்..

விராட் கோலி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இன்னும் ஒரு சதம் அடித்தால் கூட ரோஹித் சர்மாவை முந்துவார். இந்தியா இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். அவர் சாதனையை வீழ்த்தவும் கோலிக்கு வாய்ப்பு உள்ளது.

மூன்று இந்திய வீரர்கள்

மூன்று இந்திய வீரர்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களிலும் இந்திய வீரர்களே உள்ளனர். சச்சின் 9 சதங்கள், கோலி, ரோஹித் 8 சதங்கள் அடித்துள்ளனர். ரிக்கி பாண்டிங் 6 சதங்கள் அடித்து நான்காவது இடம் மட்டுமே பெற்றுள்ளார்.

சச்சின் சாதனை

சச்சின் சாதனை

விராட் கோலி இன்னும் இரண்டு சதங்கள் அடித்தால் சச்சின் சாதனையையும் முறியடிப்பார். கேப்டன்சியிலும் விராட் கோலி புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. இந்திய கேப்டன்களில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற சாதனைப் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

கேப்டன்சி சாதனை

கேப்டன்சி சாதனை

தற்போது தோனி 14 வெற்றிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். கோலி 11 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் வென்றால் கேப்டனாக கோலி. 14 வெற்றிகள் பெற்று தோனியுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொள்வார்.

Story first published: Wednesday, November 25, 2020, 17:06 [IST]
Other articles published on Nov 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+