For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS: பாக்ஸிங் டே டெஸ்ட்.. எத்தனை மணிக்கு ஆட்டம் தொடங்கும்? எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்?

மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்தப் போட்டிக்கான மைதானம், டாஸ் போடப்படும் நேரம், செஷன்களுக்கான இடையிலான இடைவேளை மற்றும் நேரலை உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை காலை மெல்போர்ன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இந்தப் போட்டியில் வாழ்வா சாவால் சூழலில் இந்திய அணி களமிறங்குகிறது.

ind vs aus jasprit bumrah rohit sharma

பார்டர் கவாஸ்கர் டிராபியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் இந்திய அணி கண் வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில், ஒரேயொரு தோல்வியை மட்டுமே அடைந்துள்ளது. இதனால் எம்சிஜி மைதானம் இந்திய அணிக்கு ராசியான மைதானமாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபியை ரீடெய்ன் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நேரம் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. பிரிஸ்பேனை காட்டிலும் மெல்போர்னில் 40 நிமிடங்களுக்கு முன்பாகவே ஆட்டம் தொடங்கவுள்ளது.

அதன்படி 4வது டெஸ்ட் போட்டிக்கான டாஸ் அதிகாலை 4.30 மணிக்கு போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு பின் முதல் செஷன் தொடங்கப்படவுள்ளது. முதல் செஷனை பொறுத்தவரை காலை 5 மணிக்கு தொடங்கப்பட்டு 7 மணி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின் 40 நிமிடங்கள் உணவு இடைவேளை வழங்கப்படும்.

தொடர்ந்து காலை 7.40 மணிக்கு 2வது செஷன் தொடங்கப்பட்டு, 9.40 மணி வரை நடக்கும். பின்னர் 20 நிமிடங்கள் தேநீர் இடைவேளை அளிக்கப்பட்டு கடைசி செஷன் காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு மதியம் 12 மணி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெல்போர்னில் வழக்கத்தை விடவும் அதிகமாக வெயில் இருப்பதால், வீரர்களுக்கு கூடுதலாக டிரிங்ஸ் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதேபோல் ரசிகர்களும் கூடுதலாக கைகளில் தண்ணீர் வைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும். அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரலையால ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, December 25, 2024, 9:02 [IST]
Other articles published on Dec 25, 2024
English summary
India vs Australia: When and Where to watch the Boxing day Test Match between India and Australia at MCG. In Brisbane, Match starts at 5.40 AM. But in Melbourne, Match Starts at 5 AM IST.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+