For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG - பிளேயிங் லெவன் என்ன மாற்றம் நடக்கும்? தட்ப வெட்பத்தால் குழம்பி நிற்கும் இந்திய அணி

IND VS ENG : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த தொடரை இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் ஏற்கனவே வென்றுவிட்டது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி புள்ளிகளைக் குவிக்க வேண்டும் என்றால் இந்த டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டும்.

இந்த நிலையில் தர்மசாலாவில் போட்டி நடைபெறுவதால் பிளேயிங் லெவனை எப்படி தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். இதற்கு காரணம் ஏற்கனவே ரஞ்சிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் தான் ஐந்தாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது.

India vs England - 2 changes may happen in india playing xi for 5th test

இப்படி இருக்கும் பட்சத்தில் பந்து பேட்டிற்கு வரவே வராது. மேலும் ஆடுகளம் தோய்வாக இருக்கும். ரன் சேர்க்க கடினமாக இருக்கும். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு இது சாதகமாக அமையும். ஆனால் தட்ப வெட்ப நிலை மிகவும் குறைவாக இருப்பதால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் சுழற் பந்துவீச்சாளர்கள் பந்தை பிடித்து வீசுவது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும்.

இதனால் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்குவது என்பது நல்ல பலனை தரும். புதிய பந்தில் கொஞ்சம் ஸ்விங் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேனகளுக்கும் நெருக்கடி ஏற்படுத்தும். இதனால் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்கலாமா என்ற யோசனையில் ரோகித் சர்மா இருக்கிறார். அப்படி இல்லை என்றால் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து தான் பிளேயிங் லெவனை தேர்வு செய்ய முடியும்.

இந்த சூழலில் குல்தீப் யாதவை வெளியே அனுப்புவதா? இல்லை ஜடேஜாவை வெளியே அனுப்புவதா என்ற கேள்வியும் இருக்கும். இதேபோன்று பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. தொடர்ந்து சொதப்பி வரும் ரஜத் பட்டிதாருக்கு பதிலாக முன்னாள் ஆர்சிபி வீரர் தேவுதட் படிக்கல் பிளேயிங் லெவனின் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் டிராவிட்டும்,ரஜத் பட்டிதாருக்கு இன்னொரு ஒரு வாய்ப்பை கொடுக்கலாம் என்று யோசித்து வருவதாக தெரிகிறது.

பயிற்சியில் கூட ரஜத் பட்டிதார் தான் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனை பார்க்கும்போது அவர் நிச்சயம் இடம்பெறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. உத்தேச பிளேயிங் லெவன் : 1, ரோகித் சர்மா, 2, ஜெய்ஸ்வால், 3,சுப்மன் கில், 4, சர்பராஸ் கான், 5, ரஜட் பட்டிதார்/ தேவுதட் படிக்கல். 6, ஜடேஜா, 7, துருவ் ஜூரல், 8, அஸ்வின், 9, குல்தீப் யாதவ் / ஆகாஷ் தீப், 10. பும்ரா, 11, முகமது சிராஜ்

Story first published: Wednesday, March 6, 2024, 8:01 [IST]
Other articles published on Mar 6, 2024
English summary
India vs England - 2 changes may happen in india playing xi for 5th test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+