IND vs ENG -ஆடுகளம் குறித்து புலம்ப தொடங்கிய இங்கிலாந்து.. பிசிசிஐ மீது குற்றச்சாட்டு..என்ன நடந்தது?
IND VS ENG : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தர்மசாலாவில் பயிற்சி செய்து வருகின்றனர்.
நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்த தொடரை இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன் இந்தியா எந்த ஆடுகளத்தை கொடுத்தாலும் நாங்கள் எந்த ஒரு புகாரையும் சொல்லாமல் விளையாடுவோம் என்று இங்கிலாந்து அணி கூறி இருந்தது.

ஆனால் தற்போது மெல்ல மெல்ல குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து அணி வீரர்கள் கூறி வருகின்றன. தர்மசாலாவில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி அஸ்வினுக்கும் இங்கிலாந்து வீரர் ஜானி பாரிஸ்டோவுக்கும் 100 வது டெஸ்ட் போட்டியாகும். இதனால் இவ்விரு அணி வீரர்களும் மீது கவனம் திரும்பி இருக்கிறது.
இந்த நிலையில் ஆடுகளம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய பாரிஸ்டோ ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தை ஐந்தாவது டெஸ்ட்டிற்கு பிசிசிஐ வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறேன். நிச்சயம் எனக்கு இது பெரிய விஷயம்.
ஆடுகளத்தை பொறுத்தவரை கடைசியாக இங்கு நடைபெற்ற ரஞ்சி கோப்பைக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் தான் தற்போது எங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். எனினும் மைதான ஊழியர்கள் இங்கு சிறப்பான பணியை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
ஏனென்றால் இங்கு தட்ப வெப்ப நிலை மிகவும் குறைவாக இருக்கும். இங்கு ஆடுகளத்தை பராமரிப்பது என்பது கடுமையான பணி. ஆனால் ஊழியர்கள் சிறப்பான பணியை செய்திருக்கிறார்கள். கடந்த முறை எல்லை கோட்டுக்கு அருகே இருந்த இடங்கள் மோசமாக இருந்தது. அதனை தற்போது சிறப்பாக மாற்றி இருக்கிறார்கள்.
இயற்கை எழில் கொஞ்சும் மிகவும் அழகான மைதானங்களில் இதுவும் ஒன்றாகும் என்று ஜானி பாரிஸ்டோ கூறியிருக்கிறார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் என்றால் பந்து பேட்டிற்கு வராது. மேலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்த
ஆடு களங்களில் ரன் குவிப்பது என்பது மிகவும் கடினமாகும். ஆடுகளம் குறித்து குறை சொல்ல மாட்டோம் என்று கூறிய இங்கிலாந்து வீரர்கள் தற்போது தர்மசாலா ஆடுகளம் குறித்து புலம்ப தொடங்கி விட்டார்கள்.


Click it and Unblock the Notifications