Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG - டெஸ்ட் தொடரில் பில்டிங்கிற்கு இம்முறை 2 விருது.. எந்த வீரருக்கு கிடைத்தது தெரியுமா?

தர்மசாலா : இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து யார் பில்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீரர்களும் போட்டியின் போது சிறப்பாக பில்டிங் செய்ய தூண்டுகோலாக இருக்கும்.

இந்த நிலையில் ஒவ்வொரு தொடரிலும் இதனை இந்திய அணி பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பில்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பதக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.

India vs England - Best fielding award given to these two players


இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் இந்திய அணியின் பயிற்சியாளர் திலீப் அணி வீரர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அதில் இந்தத் தொடரில் ஒவ்வொரு வீரர்களின் பணியும் சிறப்பாக இருந்தது. ஆடுகளத்தில் நம் திறமையை வெளிப்படுத்தினோம். ஒவ்வொரு வீரரின் சக்தி மற்றும் திறன் அதிக அளவில் வெளிப்பட்டது.

நிச்சயமாக ஒவ்வொரு வீரருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்தே ஆக வேண்டும். இந்த தொடர் தொடங்கும் போது நாம் ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் ஒரே அளவிலான திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினோம். இந்த தொடரில் ஒவ்வொரு வீரர்களும் சவாலை ஏற்று சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்கள். எப்போதும் நாம் பில்டிங்கிற்கு ஒரு விருது தான் கொடுப்போம்.

ஆனால் இம்முறை இரண்டு விருதுகளை கொடுக்க இருக்கின்றோம். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் பிடிப்பது மட்டும் போதாது. களத்தில் பில்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும். எனவே இம்முறை இரண்டு விருது வழங்க இருக்கிறோம். இந்தத் தொடரில் பல வீரர்கள் பில்டிங்கில் ஜொலித்தார்கள்.

குறிப்பாக ஸ்ரேயாஸ் விளையாடிய சில போட்டிகளில் கேட்ச் மற்றும் ரன் அவுட் ஆகியவற்றை செய்தார். இதேபோன்று குல்திப் யாதவ் களத்தில் கடும் உழைப்பை வெளிப்படுத்தினார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறை அணிக்கு வந்த ஒரு புது வீரர் நான் பேட்ஸ்மேன் அருகே நிற்கும் ஷார்ட்லெட் இடத்திற்கு நான் நிற்கின்றேன். எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினார்.
அதற்காக சர்பராஸ்கானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

இதே போல் கில், ரோகித் துருவ் ஜூரல் ஆகியோர் முக்கியமான கேட்ச்களை பிடித்தார்கள். எனவே யாருக்கு இந்த விருதை வழங்குவது என்பதில் மிகவும் குழப்பம் இருந்தது. எனவே இம்முறை இரண்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த விருதை பகிர்ந்து கொடுக்கலாம் என்று நினைக்கின்றோம்.கில் மற்றும் ரோஹித் ஆகியோர் சிறப்பாக கேட்ச் பிடித்து தான் அவர்களுக்கு முதல் விருது வழங்கப்படுகிறது. களத்தில் சிறப்பாக செயல்பட்டு அணியின் யுக்திகளுக்கு உதவிய குல்தீப் ஆவதற்கு இரண்டாவது விருது வழங்கப்படுகிறது.

Story first published: Sunday, March 10, 2024, 19:20 [IST]
Other articles published on Mar 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+