Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டநாயகன் விருது- ஜெய்ஸ்வாலை ஏமாத்திட்டாங்க.. ஒருவர் கூட 30 தாண்டுல..இரட்டை சதம் அடித்தும் கிடைக்கல

Jasprit Bumrah: இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது போட்டியில் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஜெய்ஸ்வாலின் இரட்டை சதம் மட்டும்தான் காரணமாக இருந்தது.

ஏனென்றால் இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 143 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்திய அணி வீரர்களின் யாருமே 30 ரன்களை தாண்டவில்லை. கில் 34 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்கள், ரஜத் பட்டிதார் 32 ரன்கள், அக்சர் பட்டேல் 27 ரன்கள்,ரோகித் சர்மா 14 ரன்கள் என ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் இப்படித்தான் அடித்திருந்தது.

India vs England - Fans upset with the decision for ignoring Jaiswal performance for man of the match


ஆனால் ஜெய்ஸ்வால் மட்டும் கடினமான அந்த ஆடுகளத்தில் அபாரமாக விளையாடி 19 பவுண்டரி, 7 சிக்சர் என 209 ரன்கள் குவித்து இருந்தார். ஜெய்ஸ்வாலும் 20, 30 ரன்கள் ஆட்டம் இழந்து இருந்தால் இந்திய அணி 200 ரன்களை கூட தொட்டு இருக்காது. ஜெய்ஸ்வாலின் பங்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால் முதலில் அபாரமாக பந்துவீசி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட் எடுத்திருந்த நிலையில் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் தடுமாறினர். இதேபோன்று இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக செயல்பட்டு மூன்று விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் இந்த போட்டியில் அவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.


இதனால் ஆட்டநாயகன் விருது யாருக்கு தரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் வர்ணனையாளர்களும் ஜெய்ஸ்வாலை பெயரை புறந்தள்ளி பும்ராவுக்கு தான் ஆட்டநாயகன் விருது வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பும்ராவை விட ஜெய்ஸ்வால் இளம் வீரராக இருக்கிறார். தற்போது தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய கால் தடம் எடுத்து வைத்திருக்கிறார்.


24 வயதுக்குள் இத்தகைய சாதனையை ஜெய்ஸ்வால் படைத்திருக்கிறார். இந்திய அணியை தனி ஆளாக அவர் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.இப்படி இருக்க ஜெய்ஷாலுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்காமல் பும்ரா ஆறு விக்கெட்டை முதலில் எடுத்திருக்கிறார் என்ற காரணத்திற்காக அவருக்கு வழங்கியிருப்பது சரி கிடையாது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஸ்டார் வீரர் என்பதற்காக அவர் மனதைக் குளிர வைக்க இப்படி ஒரு முடிவை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் எடுத்து விட்டதாக ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள்.

Story first published: Monday, February 5, 2024, 21:34 [IST]
Other articles published on Feb 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+