Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினை ஒரு பேட்ஸ்மேனாக தான் தெரியும்..எப்படி பவுலர் ஆனார் தெரியல- இஷான் கிஷனுக்கு ரோகித் எச்சரிக்கை

மும்பை : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது போட்டி தர்மசாலாவில் நாளை வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்ற நிலையில், தற்போது கடைசி டெஸ்ட் போட்டிக்காக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, பல்வேறு விஷயங்கள் குறித்து பேட்டி அளித்தார். அதனை தற்போது பார்க்கலாம். அஸ்வின் நாளை 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். இது மிகப்பெரிய சாதனை. அவர் ஒரு மேட்ச் வின்னர்.

India vs England - Rohit lauds R ashwin and gives ultimatum to Ishan kishan

ஒவ்வொரு தொடரிலும் மிகப்பெரிய பங்கை அணியின் வெற்றிக்கு ஆற்றுகிறார். நான் அண்டர் 19 கிரிக்கெட்டில் இருந்து அஸ்வினை பார்த்து வருகிறேன். நான் பார்க்கும்போது அவர் தொடக்க வீரராக இருந்தார். நானும் அப்போதெல்லாம் பந்து வீசுவேன். தற்போது நான் பேட்ஸ்மேனாக மாறிவிட்டேன். ஆடுகளத்தில் அவர் கடுமையாக பயிற்சி செய்வார்.

வலைப்பயிற்சியில் பல மணி நேரம் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி நான் பார்த்திருக்கிறேன். அஸ்வின் எப்போதுமே அணிக்காக விளையாடக் கூடியவர். ராஜ்காட் டெஸ்டில் கூட எங்களுக்கு போன் செய்து நான் மீண்டும் அணியில் வந்து சேர்ந்து கொள்கிறேன் என்று கூறினார். நான் பள்ளியில் பெரியதாக படிக்கவில்லை.

ஆனால் கிரிக்கெட் களத்தில் எதிரணி குறித்து நன்றாக படிப்பேன். ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டனாகவும் கற்றுக் கொள்ளும் முயற்சியை நான் மகிழ்ச்சியாக செய்வேன். இந்த தொடரில் நாங்கள் பல அழுத்தத்திற்கு ஆளானாலும், அப்போதும் கூட ரிலாக்ஸ் ஆக இருந்து அதிலிருந்து மீண்டு வர வழியை கண்டுபிடித்தோம்.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவோ இல்லை.வேறு எப்படி செயல்பட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய ஒரே இலக்கு வெற்றி தான். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் கூட இரு அணிகளுக்குமே சாதக பாதங்கள் விஷயங்கள் நிறைய இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை இந்த தொடரில் நாங்கள் வென்ற விதம் தோல்வியில் இருந்து மீண்டு வந்த விதம் திருப்திகரமாக இருக்கிறது.

நான் தர்மசாலாவில் இதுவரை ஒரு டெஸ்ட் கூட்டில் கூட விளையாடுவதில்லை. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்டில் கூட வேகப் பந்துவீச்சாளர்கள் ஸ்பின்னர்களின் பங்கு மிகவும் முக்கியமாக இருந்தது. ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. பந்து முதலில் கொஞ்சம் ஸ்விங் ஆகும் என்று நினைக்கின்றேன்.

நாளைய போட்டியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் வைத்து கூட விளையாட வாய்ப்பு இருக்கிறது. இளம் வீரர்கள் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தால் நிச்சயம் ரஞ்சிப் போட்டிகளில் விளையாட வேண்டும். மருத்துவக் குழு ஓய்வுக்கு அறிவுறுத்தி இருந்தால் மட்டுமே தவிர அனைத்து வீரர்களுமே இனி உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட் போட்டி தான் இந்திய கிரிக்கெட் அணியின் உயிர்நாடியே. அதற்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, March 6, 2024, 12:43 [IST]
Other articles published on Mar 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+