IND vs ENG - 5 இன்னிங்சில் 3 அரைசதம்.. அதிரடி காட்டிய சர்பராஸ் கான்.. துண்டு ஒரு தடவை தான் தவறும்!
Sarfaraz khan : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சர்பராஸ் கான் 55 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். ஒட்டுமொத்த ரசிகர்களுமே இந்த வீரருக்கு ஏன் இவ்வளவு நாள் வாய்ப்பு கொடுக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டால் அது சர்பராஸ்க்கு தான்.
ஏனென்றால் அண்டர் 19 கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை நிரூபித்த சர்பராஸ் கான், ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடி ஒரு கட்டத்தில் தான் எனக்கு பிறகு அதிக சராசரி வைத்திருந்த வீரர் என்று பெருமையை பெற்றிருந்தார்.

முச்சதம் இரட்டை சதம் என பட்டையை கிளப்பிய சர்பராஸ் கானுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு தரப்படவில்லை. இந்த நிலையில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் நடப்பு தொடரில் விளையாடாத நிலையில் சர்பராஸ் கானுக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அறிமுகப் போட்டியில் சர்பராஸ் கான் இரண்டு இன்னிங்ஸுமே அரைசதம் அடித்து அசத்தினார்.
மேலும் சர்பராஸ் கான் நீண்ட நாட்கள் காத்திருந்த பிறகு அணிக்கு வந்திருந்ததால் ரசிகர்கள் இதனைக் கொண்டாடினர். இது ஒரு தரப்பினருக்கு கண்ணை உறுத்தியது. இந்த நிலையில் சர்பராஸ் விளையாடிய ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்சில் தடுமாறினார். இதனால் ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
சர்பராஸ் கானுக்கு தேவையில்லாத ஊடக வெளிச்சம் கொடுக்கப்பட்டதாகவும், அவர் கொண்டாடும் அளவுக்கு பெரிய ஆள் கிடையாது என்பது போல் பேசி வந்தனர். இந்த நிலையில் தர்மசாலாவில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர்.
பேட்டிங் வரிசையில் ஐந்தாம் இடத்தில் சர்பராஸ்கான் களம் இறங்கினார். முதலில் கொஞ்சம் பொறுமையாக ஆடிய சர்பராஸ்கான், பின் அதிரடியை காட்டினார். சர்பராஸ் கான் எட்டு பவுண்டரிகள் ஒரு சிக்சர் என அடித்து 55 பந்துகள் எல்லாம் அரை சதம் கடந்தார். இதன் மூலம் விளையாடிய ஐந்து இன்னிங்ஸ்களில் மூன்று முறை சர்பராஸ் கான் அரை சதம் கடந்து இருக்கிறார்.மேலும் இதனைப் பாராட்டிய ரவி சாஸ்திரி, சர்பாஸ்கான் சிலருக்கு தன்னுடைய ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் என்று பாராட்டினார்.


Click it and Unblock the Notifications