Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் சாதனையை சமன் செய்த கில்.. WTC தொடரில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்

IND VS ENG : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கில், சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் கில், ஒரு மிகப்பெரிய சாதனையை சமன் செய்திருக்கிறார்.

இந்திய அணியில் ஆஸ்த்தான 3வது வீரராக இருந்த புஜாரா மோசமான பார்ம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து அந்த இடத்தில் களமிறங்கிய கில்லும் தொடர்ந்து சொதப்பினார்.

India vs England - Shubman gill equals Virat kohli record in World test championship

இதனால் கில்லை நீக்கிவிட்டு புஜாராவை கொண்டு வர வேண்டும் என்ற குரல் எழுந்தது. ஆனால் தன்னுடைய திறமையை நிரூபித்த கில், அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறார். இந்த நிலையில் தர்மசாலாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நான்காவது சதம் அடித்திருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி சாதனையை கில் சமன் செய்திருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷித் தொடரில் இதுவரை நான்கு சதத்தை விராட் கோலி அடித்திருந்த நிலையில், தற்போது கில் அதனை சமன் செய்திருக்கிறார்.

இந்த தொடரில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்திருக்கிறார். ரோகித் சர்மா ஒன்பது சதமும், கில்,விராட் கோலி, மாயங் அகர்வால் ஆகியோர் 4 சதமும், ஜடேஜா ,ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரகானே, ராகுல் ஆகியோர் 3 சதமும் அடித்திருக்கிறார்கள்.

தொடக்க வீரர் என்ற இடத்தில் இருந்து மூன்றாவது இடத்தில் களமிறங்கினால் தம்மால் சிறப்பாக செயல்பட முடியும் என்று ரோகித் ஷர்மா மற்றும் டிராவிட்டிடம் கெஞ்சி கூத்தாடி இந்த இடத்தை கில் வாங்கியிருந்தார்.தற்போது அவர் சொன்னப்படியே ரன்களை சேர்த்து வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Friday, March 8, 2024, 18:29 [IST]
Other articles published on Mar 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+