For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டேய்.. நான் ஆண்டர்சன் டா! கொஞ்சம் கூட மதிக்காத கில்.. இறங்கி வந்து அடித்த சிக்ஸ்.. ஆடி போன ஸ்டோக்ஸ்

தர்மசலா:இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கில் ஆண்டர்சன் ஓவரை பிரிந்து மெய்ந்தார். தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களை சேர்த்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் ரோகித் சர்மா 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

India vs England - Shumban gill hits straight six off anderson ball

இன்றும் இந்திய அணி வீரர்கள் அதிரடியை காட்டினர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் தடுமாறினர். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆண்டர்சன் தர்மசாலாவில் அதிக விக்கெட் வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம் தர்மசாலா குளிர் பிரதேசம் என்பதால் அங்கு ஆடுகளம் வேகப்பந்து வீட்டுக்கு சாதகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் ஆண்டர்சன் அனுபவம் வாய்ந்த வீரர். இவரை எதிர்கொள்வது இந்திய வீரர்களுக்கு கடினம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்தனர். ஆனால் இந்த அனைத்து கணிப்பையும் இந்தியாவின் இளம்படை சுக்கு நூறாக உடைத்தது. பொதுவாக ஒரு அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளரை எதிர்கொள்ளும்போது பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் தயங்குவார்கள். அவருடைய பந்தை எப்படி எதிர்கொள்வது என்ற பயம் நிச்சயம் இருக்கும்.

ஆனால் இந்திய அணியின் இளம் படை ஆண்டர்சனை ஏதோ ஒரு சாதாரண பவுலரை எதிர்கொள்வது போல் ரன்களை அடித்து நொறுக்கினர். குறிப்பாக ஆண்டர்சன் வீசிய ஒரு பந்தை இறங்கி வந்து நேராக ஒரு சிக்சரை கில் அடித்தார். ஆண்டர்சன் பந்தையே இவ்வாறு நொறுக்கிவிட்டார் என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

மேலும் கில்லின் இந்த சாட்டை கண்டு இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் வாயடைத்துப் போய் ஒரு ரியாக்சன் கொடுத்தார். கில் இன்றைய ஆட்டத்தில் மட்டும் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடித்து அசத்தி இருந்தார். பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக களமிறங்கி கில் ஆரம்ப கட்டத்தில் தடுமாறினாலும் தற்போது சதம் சதமாக அடித்து தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.

Story first published: Friday, March 8, 2024, 13:02 [IST]
Other articles published on Mar 8, 2024
English summary
India vs England - Shumban gill hits straight six off anderson ball டேய்.. நான் ஆண்டர்சன் டா! கொஞ்சம் கூட மதிக்காத கில்.. இறங்கி வந்து அடித்த சிக்ஸ்.. ஆடி போன ஸ்டோக்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+