IND vs ENG - சுழற்பந்துவீச்சு ஆடுகளம் தான்.. ஆனால் ஸ்பின்னர்கள் தடுமாறுவார்கள்.. காரணம் இது தான்
IND VS ENG : இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை ஏழாம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்டது தொடரை இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் ஏற்கனவே வென்ற நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியும் வென்றால் அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஒரு பலத்தை கொடுக்கும்.
இதன் காரணமாக கடைசி போட்டியில் வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்திய அணி வீரர்கள் இருக்கிறார்கள். இதற்காக ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தர்மசாலாவில் பயிற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தர்மசாலாவில் உள்ள ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால் இதில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. தர்மசாலா ஒரு குளிர் பிரதேசமாகும். மேலும் இரவு வெப்பம் ஒரு டிகிரி, 2 டிகிரி என்ற அளவும் பகல் நேரத்தில் 12 டிகிரி 13° என்று அளவில் இருக்கும். இந்த குளிர் பிரதேசத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் பந்தை பிடித்து சரியாக பந்து வீச முடியாது.
இதன் காரணமாக இந்த ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் கடுமையாக தடுமாறுவார்கள். இந்த நிலையில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், அதனை சரியாக பயன்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கும். இதனால் இந்திய அணி இரண்டு சுழற் பங்குவீச்சாளர்களை வைத்து களமிறங்குவதே போதுமானதாக இருக்கும்.
இதன் காரணமாக இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடுவது நல்ல திட்டமாக அமையும். ஐந்தாவது டெஸ்ட்க்கு பும்ரா திரும்புவதால் இந்திய அணியில் பும்ரா, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரையும் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரையும் வைத்து விளையாடலாம்.
குல்தீப் யாதவ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் அவரையும் அணியை விட்டு நீக்குவது சிரமமாகும். மேலும் சுழற் பந்துவீச்சாளர்களால் பந்தை பிடிக்க கூட முடியாது என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்திய அணி நிர்வாகம் தற்போது முழித்து வருகிறது.


Click it and Unblock the Notifications