Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேஸ்பால் மீண்டும் தோற்றுவிட்டது..அறிவோட விளையாட மாட்டீங்களா? இங்கிலாந்து மீது ஜாம்பவான் கடும் தாக்கு

IND VS ENG : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேஸ் பால் யுக்தி ஒரு தோல்வி அடைந்த திட்டம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெஃப்ரி பாய்காட் கடுமையாக சாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் இங்கிலாந்து அணி பல வெற்றியை குவித்தாலும் சில போட்டிகளில் தேவையில்லாமல் தோல்வியும் தழுவுகிறது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி பாய்காட், பயிற்சியாளர் மெக்குல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிரடியாக ஆடுகிறேன் என்ற யுத்தியில் பைத்தியம் ஆகிவிட்டார்கள்.

India vs England test - Legendary Geoffrey Boycott criticize Ben stokes and mccullum for Bazball

எப்போதுமே அடித்து ஆட வேண்டும் அடித்து என்ற பித்து அவர்களுக்கு பிடித்து விட்டது. மேலும் பேஸ் பால் திட்டத்தால் இங்கிலாந்து தோல்வியை தழுவினால் எங்களால் தோற்க முடியவில்லை என்றாலும் நாங்கள் போராடி நல்ல முறையில் தோற்க்கிறோம் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.தோற்பதில் என்ன நல்ல தோல்வி? அதில் என்ன பெருமை இருக்கிறது என்று ஜெஃப்ரி பாய் கார்ட்ஸ் சாடி இருக்கிறார்.

மேலும் பேசிய அவர் பேஸ்பால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்காக இருக்கிறது. ஆனால் அது சரியாக செயல்பட்டால் மட்டும்தான். ஆனால் இந்த சூழலில் எப்படி செயல்பட வேண்டும் என்ற விஷயம் உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் முக்கியமான ஒரு பாடத்தையே தவற விட்டீர்கள் என்று அர்த்தம். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆட்டத்தை இந்தியாவுக்கு விட்டுக் கொடுத்து விட்டார்கள். பேஸ் பால் ஒரு தோல்வியான யுக்தி.

ஆசஸ் தொடரில் இங்கிலாந்து அணி இதே போன்ற ஒரு தவறை தான் செய்தது. வெற்றி பெறும் போட்டியில் அதிரடியாக ஆடி போட்டியை விட்டுக் கொடுத்தது. எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸ் போட்டியிலும் இதே முறையில் தான் ஆசஸ் தொடரில் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு தானமாக விட்டு கொடுத்தனர். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் ரன்கள் தான் முக்கியமே தவிர எப்படி விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல.

400 ரன்கள் என்ற இலக்கை எட்ட வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் பெரிய சதத்தை அடிக்க வேண்டும். அதுதான் சிறந்த வழி ஒரு நல்ல பவுலரை எதிர்கொள்ளும்போது அவருடைய பந்தை அடித்து ஆடுகிறேன் என்ற பெயரில் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும். நேர்மறையான எண்ணத்துடன் ஏன் விளையாட முடியாது. கொஞ்சம் அறிவையும் பயன்படுத்தி ஏன் உங்களால் விளையாட முடியாது.

சூழலுக்குத் தகுந்த மாதிரி பேட்டிங் செய்வது தான். அதில் இருக்கும் நல்ல விஷயமே எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம்?எந்த சூழலில் விளையாடுகிறோம் என்பதை பார்த்து பேட்டிங் செய்ய வேண்டும். எந்த பந்தை அடிக்க வேண்டும். எந்த பந்தை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பேட்ஸ்மேனுக்கு தெரிய வேண்டும். ஒரு பவுலர் நன்றாக பந்து வீசி வருகிறார் என்றால் அவருடைய பந்தை தொடவே கூடாது என்று ஜெஃப்ரி பாய்காட் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Tuesday, February 6, 2024, 8:10 [IST]
Other articles published on Feb 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+