Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா பின்னிட்டாங்க! இவங்களால தான் தொடரே விறுவிறுப்பா ஆயிடுச்சி.. சச்சின், லட்சுமணன் பாராட்டு

விசாகப்பட்டினம் : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.

மேலும் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த பிறகு ஓவராக பேசிய இங்கிலாந்து அணி வீரர்களுக்கு தற்போது தக்க பதிலடி கிடைக்கப்பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து பாராட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் இது மிக சிறப்பான கிரிக்கெட் ஆட்டமாக இருந்தது.

India vs England test - Sachin tendulkar and vvs Laxman lauds india national cricket team for win


இந்திய அணி வீரர்கள் பிரமாதமாக விளையாடி இருக்கிறார்கள். தற்போது தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள் என்று பாராட்டி இருக்கிறார். இதேபோன்று பிரபல கிரிக்கெட் வீரர் வி வி எஸ் லட்சுமணன் வெளியிட்டுள்ள பதிவில் ,பும்ரா நீங்கள் ஒரு சாம்பியன் வீரராக இருக்கிறீர்கள்.

அணியில் ஆதிக்கமும், மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் செய்கிறீர்கள். இந்திய பந்துவீச்சின் தலைவராக செயல்படுகிறீர்கள். தற்போது தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் சமனில் இருப்பதற்கு முக்கிய காரணமாக நீங்கள் தான் விளங்குகிறீர்கள். அடிபட்ட பிறகு இந்திய அணி தற்போது வெற்றி பெற்றிருக்கிறது. ஜெய்ஸ்வால் ரன் எடுக்க வேண்டும் என்ற பசியை இந்த டெஸ்ட் போட்டியில் காட்டியிருக்கிறார்.

இதை போன்று கில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை மீண்டும் கண்டுபிடித்து அபாரமாக ஒரு சதத்தை அடித்திருப்பதை பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியை நினைத்து இந்திய அணி பெருமை கொள்ளலாம். அதேசமயம் இங்கிலாந்து அணியும் அவ்வளவு சீக்கிரமாக போட்டியை விட்டுக் கொடுக்கவில்லை.அவர்களும் போராடினார்கள் இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக அமையப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.


இது தொடர்பாக ஷேவாக் வெளியிட்டுள்ள பதிவில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் 24 வயதினிலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவில் எதிர்காலம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.இதேபோன்று ஜாகீர் கான் பேசுகையில் இந்திய அணி தரமான கம் பேக் ஒன்றை கொடுத்திருக்கிறது. இனி இந்த தொடர் ஒரு அணிக்குச் சார்ந்ததாக இருக்காது இரு அணிகளுமே வெற்றிக்கு போராடும் என்று கூறியிருக்கிறார்.

Story first published: Monday, February 5, 2024, 20:48 [IST]
Other articles published on Feb 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+