Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG - 5வது டெஸ்டில் பும்ரா திரும்புவாரா? ரோகித் சொன்னது என்ன? நிச்சயமா இவருக்கு தான் ஆப்பு

IND VS ENG : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது. இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்ற நிலையில் கடைசி போட்டி சமீபிரதாய ஆட்டமாக தான் நடைபெறும்.

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் விளையாடும் அனைத்து போட்டிகளுமே வெற்றி பெற வேண்டும். இதனால் இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் சாதாரணமாக நினைத்து விட முடியாது.

India vs England - who will Jasprit bumrah might replace in 5th test

நாம் இங்கு வெல்லும் ஒவ்வொரு டெஸ்ட்டும் வெளிநாட்டில் நாம் தோல்வி அடைந்தால் கூட இந்த முடிவுகள் நம்மை காப்பாற்றும். இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டது. தற்போது தொடரை இந்தியா வென்ற நிலையில் பும்ரா அணிக்கு திரும்புவாரா என்று கேள்வி எழுந்தது.

ஐபிஎல் நெருங்கி வரும் நிலையில் பும்ரா டெஸ்ட் போட்டிக்கு மட்டையை போட்டு விடுவார் என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவை பொறுத்தவரை ஐந்தாவது டெஸ்டையும் அவர் முக்கியமானது போட்டியாக தான் நினைத்து வருகிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது தொடரை வென்றால் கூட ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் விளையாடுவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

இதனால் ஐந்தாவது டெஸ்டில் பும்ரா நிச்சயம் அணிக்கு திரும்ப வேண்டும் என்று பிசிசிஐ தேர்வு குழுவிடம் ரோகித் சர்மா பேசியிருக்கிறார். இதன் காரணமாக பும்ரா ஐந்தாவது டெஸ்டில் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. தற்போது ஒரு வாரத்திற்கு மேல் இடைவெளி இருப்பதால் பும்ராவுக்கு கூடுதலாகவே ஓய்வு கிடைத்திருக்கும்.

இதனால் வரும் மார்ச் மூன்றாம் தேதி தர்மசாலாவில் இந்திய அணியின் பயிற்சி முகாம் தொடங்குகிறது இதில் பும்ரா நிச்சயம் பங்கேற்பார் என தெரிகிறது. இந்த நிலையில் பும்ரா வந்தால் எந்த வீரர் வெளியேற்றப்படுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. முகமது சிராஜ் ஏற்கனவே தன்னுடைய திறமையை நிரூபித்தாலும், ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் கடைசி இன்னிங்சில் அவர் மூன்று ஓவர் மட்டுமே வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இந்த நிலையில் அறிமுக வீரராக செயல்பட்ட ஆகாஷ் தீப் மூன்று முக்கிய விக்கெட்டுகளை முதல் இன்னிங்சில் வீழ்த்தினார். எனினும் அவருடைய ஓவரிலும் ரன்கள் கசிந்தது. இதனால் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற குழப்பம் இருந்தது. இந்த நிலையில் சிராஜிக்கு மீண்டும் ஓய்வு அளித்துவிட்டு பும்ராவுடன் ஆகாஷ் தீப்பை இணைந்து கடைசி டெஸ்டில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Wednesday, February 28, 2024, 7:30 [IST]
Other articles published on Feb 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+