Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. இந்திய அணியில் 3 மாற்றம்.. சஞ்சு சாம்சனுக்கு புதிய பொறுப்பு

டுபிளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் போட்டியை இந்திய அணி வென்ற நிலையில், 2வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாகவும், மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்பதாலும் பேட்டிங் முடிவை எடுத்ததாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

3 மாற்றம்

3 மாற்றம்

ருத்துராஜ் கெய்க்வாட்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட்டு, அவர் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். இதே போன்று ஆவேண் கானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஹர்சல் பட்டேலுக்கும், சாஹலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரவி பிஸ்னாய்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

விக்கெட் கீப்பர் மாற்றம்

விக்கெட் கீப்பர் மாற்றம்

இதே போன்று விக்கெட் கீப்பராக இன்றைய அட்டத்தில் இஷான் கிஷன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி, ஆர்ஷ்தீப் சிங் அகியோருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் உம்ரான் மாலிக் தன்னுடைய இடத்தை இன்றைய அட்டத்திலும் தக்க வைத்து கொண்டுள்ளார்.

முதலில் பேட்டிங்

முதலில் பேட்டிங்

அயர்லாந்து அணியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணிக்கும் பேட்டிங் வரும் என தெரிந்தது. இதனால் முதலில் விளையாடும் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் அடித்தால் தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். இல்லையேனில் அயர்லாந்த அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, சஞ்சு சாம்சன், 2. இஷான் கிஷன், 3, தீபக் ஹூடா, 4. சூர்யகுமார் யாதவ், 5. ஹர்திக் பாண்டியா, 6. தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல், 8, புவனேஸ்வர் குமார், 9, ஹர்சல் பட்டேல், 10. ரவி பிஸ்னாய். 11, உம்ரான் மாலிக்

Story first published: Tuesday, June 28, 2022, 21:37 [IST]
Other articles published on Jun 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+