செஞ்சூரியன் : இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் வரும் 26 ஆம் தேதி பாக்ஸிங் டே அன்று நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் பங்கு பெறுகிறார்கள்.
இந்த அணியின் பிளேயிங் லெவன் ஏற்கனவே உறுதியாகிவிட்டது. எனினும் இரண்டு இடத்திற்கு மட்டும் தான் தற்போது சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக வெளிநாட்டு மைதானங்களில் விளையாடும் போது இந்திய அணி ஒரு சுழற் பந்துவீச்சாளர் வைத்து தான் விளையாடும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் அஸ்வின் ஜடேஜாவா என்றால் ஜடேஜாவுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் அதேபோல் ஒரு சூழல் தற்போது உருவாகி இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செஞ்சூரியனில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்றும் மழை அவ்வப்போது குறிக்கிடும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் இந்திய அணியில் இடம்பெற்றால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும் என தெரிகிறது. ஜடேஜா பேட்ஸ்மேன் ஆகவும் சுழற் பந்துவீச்சாளராகவும் அணியில் உள்ள நிலையில் அஸ்வினுடைய இடத்தில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இது அஸ்வினுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
அஸ்வின் 500 விக்கெட்டுகளை நெருங்கும் நிலையில் தற்போது இப்படி வாய்ப்பு கிடைக்காமல் போனால் அந்த மைல் கல்லை தொட முடியாத நிலை ஏற்பட்டு விடும். தற்போது அஸ்வினுக்கு 37 வயதாகிறது. இன்னும் அவரால் அதிகபட்சமாக ஒரு முதல் இரண்டு ஆண்டுகள் தான் விளையாட முடியும். இந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி 17 டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறது.
இதில் அஸ்வினுக்கு முழு வாய்ப்பை ரோகித் வழங்க வேண்டும். இல்லையெனில் அஸ்வினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை தொட முடியாது. ஏற்கனவே உலக கோப்பையில் அஸ்வினின் ஒரே ஒரு போட்டியில் விளையாட வைத்துவிட்டு டிராவிட் பெஞ்சில் அமர வைத்தார். இந்த நிலையில் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை ஓரங்கட்டும் வேலை நடைபெறுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.