Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND VS SA நாளை 4வது டி20 போட்டி..ராஜ்காட்டில் ரன் மழை உறுதி..பிளேயிங் XI-ல் காத்திருக்கும் சர்பரைஸ்

ராஜ்காட்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நாளை ராஜ்காட்டில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

விசாகப்பட்டினத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், தென்னாப்பிரிக்க அணி நாளைய போட்டியை வென்றால் தொடரை வென்றுவிடும்.

டி காக் வாய்ப்பு?

டி காக் வாய்ப்பு?

தென்னாப்பிரிக்க அணியில் ஏய்டன் மார்க்ரம் கொரோனா பாதிப்பால் தொடரை விட்டு வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போன்று காயம் காரணமாக கடைசி 2 போட்டியில் விளையாடாத குயின்டன் டி காக், தற்போது மெல்ல மெல்ல உடல் தகுதியை பெற்று வருவதால், அவர் நாளைய போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

நெருக்கடியில் பண்ட்

நெருக்கடியில் பண்ட்

இந்திய அணியை பொறுத்தவரை பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் செய்ய வாய்ப்பு இல்லை என தெரிகிறது.எதாவது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு காயம் இருந்தால் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு தரப்படலாம். மற்றபடி பேட்டிங்கில் அதே வீரர்கள் தான் நாளைய போட்டியில் களமிறங்குகிறார்கள். கேப்டன் ரிஷப் பண்ட் கடந்த 2 போட்டியில் சொதப்பியதால் அவர் ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளார்.

ராஜ்காட்டில் இந்தியா

ராஜ்காட்டில் இந்தியா

ராஜ்காட் மைதானம், ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். இங்கு இந்திய அணி இதுவரை 3 டி20 போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்திடம் வெற்றியும், நியூசிலாந்திடம் தோல்வியையும் தழுவியுள்ளது. மைதானம் கொஞ்சம் பெரியது என்பதால் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளை தூக்கி அடிக்க நினைக்கும் பேட்ஸ்மேன்கள் கேட்ச்சாக வாய்ப்புள்ளது.

4வது டி20 பிளேயிங் லெவன்

4வது டி20 பிளேயிங் லெவன்

இந்திய அணி 1, ருத்துராஜ், 2, இஷான் கிஷன். 3. ஸ்ரேயாஸ் ஐயர். 4. ரிஷப் பண்ட். 5. ஹர்திக் பாண்டியா, 6. தினேஷ் கார்த்திக். 7. அக்சர் பட்டேல். 8. ஹர்சல் பட்டேல். 9. புவனேஸ்வர் குமார். 10. சாஹல். 11 அவேஷ் கான்/ உம்ரான் மாலிக்

தென்னாப்பிரிக்க அணி 1, குயின்டன் டி காக் / ஹேன்ரிக் கிளாசென், 2. பெவுமா, 3. வெண்டர் டுசன், 4. டேவிட் மில்லர். 5. ஹெண்ட்ரிக்ஸ் . 6. பெர்னல். 7. பிரிட்டோரியஸ். 8. கேசவ் மகாராஜ். 9. ஷாம்சி. 10. ரபாடா. 11. நோக்கியா

Story first published: Friday, June 17, 2022, 1:17 [IST]
Other articles published on Jun 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+