
முதல் டி20 விவரம்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்கள், இஷான் கிஷான் 89 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்கள் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

திடீர் ட்விஸ்ட்
இந்த போட்டியில் ஜடேஜாவை வைத்து ரோகித் கொடுத்த ட்விஸ்ட் தான் சுவாரஸ்யமாக இருந்தது. அதாவது நேற்றைய ஆட்டத்தில் ரன் ரேட் சிறப்பாக இருந்த போதும், 2வது விக்கெட்டிற்கு சஞ்சு சாம்சன் களமிறங்கியிருக்க வேண்டும். ஆனால் யாரும் எதிர்பார்க்காதவாறு ரவீந்திர ஜடேஜா விளையாடினார். முழு நேர பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது, ஜடேஜாவை 4வது வீரராக ஏன் விளையாட வைக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ரோகித் தந்த விளக்கம்
இந்நிலையில் அதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார். ஜடேஜாவின் கம்பேக் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் இருந்து மிகப்பெரிய விஷயங்களை பேட்டிங்கில் பார்க்க ஆசைப்படுகிறேன். அதற்காகவே டாப் ஆர்டரில் களமிறங்கக்கூறினோம். மிடில் ஆர்டரில் உள்ள பிரச்சினையை சரி செய்ய வேண்டும். அதற்கான முயற்சி தான் இது.

அடிக்கடி பார்ப்பீர்கள்
இனி வரும் போட்டிகளில் அடிக்கடி ஜடேஜா டாப் ஆர்டரில் விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள். அவர் தற்போது முழுமையான பேட்ஸ்மேன் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் திறமையை பார்த்துள்ளோம். இனி எதிர்காலத்தை மனதில் வைத்து டி20 கிரிக்கெட்டிலும் ஜடேஜாவை வைத்து மிடில் ஆர்டரை சரிசெய்ய போகிறேன் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
Recommended Video

அணிக்குள் மாற்றம்
இதன் மூலம் மிடில் ஆர்டரில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம். ஏனென்றால் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட் ஆகியோரின் இடங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இது எந்தளவிற்கு சரியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications