Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா கொடுத்த எச்சரிக்கை.. காதில் வாங்காத இந்திய பேட்ஸ்மேன்கள்.. காற்றில் பறந்த மானம்

சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த நிலையில் சென்னை ஆடுகளத்தில் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என ஜடேஜா கொடுத்த அட்வைஸை இந்திய வீரர்கள் காற்றில் பறக்க விட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

Indian batters didnt listen to jadeja advice about chennai chepauk pitch

சென்னை ஆடுகளத்தில் ஜடேஜா பத்தாண்டுகளுக்கு மேல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருக்கிறார். இதனால் இந்த ஆடுகளத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது ஜடேஜாவுக்கு நன்றாகவே தெரியும். இன்றைய ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடும் நிலையில் ஜடேஜா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த நிலையில் இன்னிங்ஸ் இடைவேளையின் போது பேசிய ஜடேஜா, 200 ரன்கள் தான் இலக்கு என்றாலும் சென்னை ஆடுகளம் தோய்வாக இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். சென்னை ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க ஆசைப்பட்டு பெரிய ஷாட்களை ஆடாமல் கிரிக்கெட்டின் அடிப்படை ஷாட்டுகளை விளையாடினார்.

நிச்சயம் வெற்றி பெற முடியும் என ஜடேஜா கூறியிருந்தார். ஆனால் பேட்டிங் செய்ய தொடக்க வீரராக களத்திற்கு வந்த இஷான் கிஷன் ஏதோ பேட்டிங் பிச்சில் ஆடுவது போல் வெளியே சென்ற பந்தை வேண்டுமென்று அடித்து கேட்ச் ஆனார். இந்த பந்தை இசான் கிஷன் தொடாமலேயே விட்டிருக்கலாம். எனெனில் இந்தியா சேஸிங் செய்ய போவது வெறும் 200 ரன்கள் என்பதால் ரிஸ்க் எடுக்கவே தேவையில்லை.

இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய ஷாட் தான் இருப்பதிலேயே மிகவும் முட்டாள்தனமானது என்று கூறலாம். பிட்ச் ஸ்லோவாக இருக்கும் போது எப்படி விளையாட வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் தேவையில்லாமல் கால்களை நகர்த்தாமல் ஒரு ஷாட் அடி டேவிட் வார்னரிடம் பிடிபட்டார்.

ஆஸ்திரேலிய அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இன்றைய ஆட்டத்தில் பந்து வீசவில்லை. இந்திய வீரர்கள் தேவையில்லாமல் ஷாட் ஆடியதால் தான் விக்கெட்டுகளை இழக்க நேரிட்டது. ஜடேஜா சொன்னது போல் இந்திய வீரர்கள் அடிப்படை மாற்றத்தை வெளிப்படுத்தி இருந்தாலே இரண்டு நாட்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

Story first published: Sunday, October 8, 2023, 20:51 [IST]
Other articles published on Oct 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+