நான்சென்ஸ்…! கோலி பேட்டியை ஆவேசமாக நிறுத்திய ரவி சாஸ்திரி..!! காரணம் இதுதான்..!
Recommended Video
மும்பை: அணியை விட எந்த தனி நபரும் முக்கியம் இல்லை என்றும், ரோகித், கோலி சண்டை குறித்த கேள்விக்கு நான்சென்ஸ் என்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணியாகக் கருதப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் மரண அடி வாங்கி வெளியேறியது. தற்போது அந்த தோல்வியை மறந்து விட்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கிறது.
சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பு, மும்பையில் பத்திரிகையாளர் சந்தித்தனர் கேப்டன் விராட் கோலி மற்றும் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும். ரோகித் சர்மா தொடர்பான கேள்விகஙள அதிகம் கேட்கப்பட்டன.

பிரச்னை தான் என்ன?
மேலும் ரோகித் சர்மாவுடன் என்ன தான் பிரச்சனை? உங்களுக்கு ரோகித் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி வருவது உண்மையா? என கேட்கப் பட்டன. அப்போது கோலி கூறியதாவது:

லாபம் உள்ளதா?
நானும் சில செய்திகளை கேள்விப்பட்டேன். இதுபோன்ற செய்திகள் வெளியில் எங்கிருந்து வருகின்றன? யாரால் இதற்கு லாபம்? உண்மை என்னவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது.

நம்பிக்கை
அணியில் எந்தவி பிரச்சனையும் இல்லை என்பதற்கு இதுவே சான்று. அணியில் எல்லோரும் ஒருவருக்கொருவர் மீது நம்பிக்கை மற்றும் மரியாதை வைத்து உள்ளனர் என்றார்.

நான்சென்ஸ்
அப்போது, விராட் கோலி வேற ஏதோ சொல்ல முயன்றார். அந்த சமயத்தில் அப்பொழுது அவரைத் தடுத்த அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். அவர் கூறியதாவது: நான்சென்ஸ். அணியை விட வேற யாரும் எந்த நபரும் முக்கியம் இல்லை. ஏன் அது நானாக இருந்தாலும் சரி, விராட் அல்லது வேற யாராக இருந்தாலும் சரி என்று சீறினார்.


Click it and Unblock the Notifications