Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WATCH: கிரிக்கெட் விளையாட அனுப்பினா… நம்ம இந்திய வீரர்கள் பண்ணுன காரியத்தை பாருங்க..!!

போர்ட் ஆப் ஸ்பெயின்: கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்பாக, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன், இந்திய அணியினர் பொழுதை கழித்த வீடியோ வைரலாகி உள்ளது.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக தடைபட்டது. 2வது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Indian players enjoying in west indies ahead of 3rd odi

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது. இந நிலையில் இந்திய வீரர் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அகர்வால் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்டு ஆகியோர் டிரினிடாட் தீவில் உள்ள ஒரு ஆற்று பகுதிக்கு சென்று தங்களது ஓய்வினை கழித்தனர்.

அதில் ஒரு ஆற்றின் நடுவே தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கயிற்றின் மூலம் அந்தரத்தில் பறந்து வந்து குதிக்கின்றனர். மகிழ்ச்சியுடன் கொண்டாடிய அந்த தருணத்தை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயாஸ் ஐயர், நிக்கோலஸ் பூரான், கீரன் பொல்லார்ட், ரிஷப் பன்ட், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ஆகியோருடன் கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்பு பொழுது போக்கும் அந்த வீடியோவை பகிரப்பட்டது.

அதனை கண்ட குறும்புக்கார இந்திய ரசிகர்கள் ஜாலியாக கிண்டல் செய்துள்ளனர். உங்களை கிரிக்கெட் விளையாட அனுப்பினால், ஜாலியாக பொழுதை கழிக்கிறீர்களா என்றும் கேட்டுள்ளனர். சிலரோ... ஓய்வுக்காக இது போன்று செல்வது தவறு இல்லை என்று சப்போர்ட் செய்திருக்கின்றனர்.

Story first published: Tuesday, August 13, 2019, 17:26 [IST]
Other articles published on Aug 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+