
சச்சின்
2003ஆம் ஆண்டு உலககோப்பையில் இந்திய அணி நமிபியாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் நமிபியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில், சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி 152 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 311 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நமிபியா அணி 130 ரன்களில் ஆட்டமிழந்தது. இது சச்சின் அடித்த ஸ்கோரை விட குறைவாகும்.

யுவராஜ் சிங்
அதே 2003 ஆம் ஆண்டு, இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் யுவராஜ் சிங் 102 ரன்களை விளாசினார். இதனால் இந்தியா 276 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் 76 ரன்களில் சுருண்டு, யுவராஜின் ஸ்கோரை விட குறைவாக எடுத்தது.

ரோகித் சர்மா
2014ஆம் ஆண்டு, இந்தியா, இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா 264 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். ஆனால் இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 251 ரன்களில் ஆட்டமிழந்து, ரோகித்தின் ஸ்கோரை கூட தொட முடியாத நிலை ஏற்பட்டது.

மீண்டும் ரோகித்
2018ஆம் ஆண்டு இந்தியா, மேற்கிந்தயத் தீவுகள் அணி மும்பையில் ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் ரோகித் சர்மா 162 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி 377 ரன்களை குவித்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி ரோகித்தின் ஸ்கோரை கூட தொட முடியாமல் 153 ரன்களில் ஆட்டமிழந்தது.

இஷான் கிஷன்
நேற்று நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் 210 ரன்கள் விளாச, இந்திய அணி 409 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 182 ரன்களில் ஆட்டமிழந்து, இஷான் கிஷனின் ஸ்கோரை கூட தொட முடியவில்லை.


Click it and Unblock the Notifications











