For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காரணம் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க.. டிரெஸ்ஸிங் ரூமில் காரசார விவாதம்.. 4 இந்திய வீரர்களுக்கு செக்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் விரைவில் பேட்டிங் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் குழு கடுமையான அறிவுரைகளை வழங்கி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அதிரடியாக நடந்து வருகிறது.இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் தொடக்கத்தில் கொஞ்சம் சொதப்பிய இங்கிலாந்து அணி தற்போது நிலையாக ஆடி வருகிறது.

இந்தியாவிற்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கும் வகையில் இங்கிலாந்து அணி அதிரடி காட்டி வருகிறது. இன்னும் சில ஓவர்களில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி

எப்படி

2வது இன்னிங்ஸ் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அதிரடியாக ஆடி வருகிறது. 6 விக்கெட்டிற்கு 160 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியை விட தற்போது இங்கிலாந்து 400 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

முன்னிலை

முன்னிலை

இன்னும் சில ஓவர்களில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தால், இந்திய அணி உடனடியாக பேட்டிங் இறங்க வேண்டிய நிலை ஏற்படலாம். தற்போது பிட்ச் முழுக்க முழுக்க பவுலிங் செய்ய சாதகமாக மாறியுள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இதனால் இந்திய பவுலர்களை எதிர்கொள்ள சிரமப்பட்டு வருகிறார்கள்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் இறங்கும் போது கடுமையாக திணற வாய்ப்புள்ளது. பிட்ச் மிக எளிதாக பவுன்ஸ் ஆகும் என்பதால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணற வாய்ப்புள்ளது.

அறிவுரை

அறிவுரை

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் விரைவில் பேட்டிங் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் குழு கடுமையான அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன்படி பிட்ச் சரியில்லை என்று சில வீரர்கள் காரணம் சொல்ல கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கண்டிப்பு

கண்டிப்பு

கடந்த முதல் இன்னிங்சில் இந்திய வீரர்கள் ரஹானே, ரோஹித், கோலி, கில் போன்றவர்கள் பொறுப்பின்றி ஆடி அவுட்டானார்கள். இதற்கு பிட்சை காரணமாக குறிப்பிட்டனர். ஆனால் இதே பிட்சில் வாஷிங்க்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 85 ரன்கள் எடுத்தார். இதனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.

நெருக்கடி

நெருக்கடி

சென்னை பிட்ச் கடந்த இன்னிங்சில் அவ்வளவு கஷ்டமாக இல்லை என்ற போதிலும் கூட இங்கிலாந்து வீரர்களின் பவுலிங்கில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய வீரர்கள் எப்படி ஆட வேண்டும், சென்னை பிட்ச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.

விவாதம்

விவாதம்

இது தொடர்பாக வீரர்களுக்கு இடையே காரசார விவாதமும் நடந்து இருக்கிறது. ரோஹித், கோலி ஆகியோருக்கு இரண்டாவது இன்னிங்சில் அதிக பொறுப்பு இருக்கும். இதனால் இந்திய வீரர்கள் மிகவும் கவனமாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Story first published: Monday, February 8, 2021, 17:21 [IST]
Other articles published on Feb 8, 2021
English summary
Indian top order batsmen should not tell Chennai pitch as the reason for their failure against England bowlers.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+