Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அறிமுக டெஸ்ட் போட்டியில் அசத்திய ரோஹித் சர்மா, ஷமி முகமது

கொல்கத்தா: அறிமுக போட்டியில் ரோஹித் சர்மாவும் ஷமி முகமதும் தங்களது அசத்தலான திறமையை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட் செய்தது.

முதல் இன்னிங்ஸிலேயே அறிமுக வீரரான ஷமி அபாரமாக பந்துவீசி மேற்கிந்திய தீவுகள் அணியை நிலைகுலையச் செய்தார். இந்திய அணி வீரர்களில் அதிக விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர் ஷமி.

ஷமி 4 விக்கெட்..

ஷமி 4 விக்கெட்..

மொத்தம் 17 ஓவர்களை வீசிய ஷமி முகமது 71 ரன்களைக் கொடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சரிவில் இருந்து மீட்ட் ரோஹித்

சரிவில் இருந்து மீட்ட் ரோஹித்

இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்துக் கொண்டிருந்த இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டவர் ரோஹித் ஷர்மா.

முதல் நாளிலேயே சதம்..

முதல் நாளிலேயே சதம்..

அத்துடன் டோணி மற்றும் அஸ்வின் ஆகியோருடன் நிலைத்து நின்று தாம் பேட்டிங் செய்த முதல் நாளில் 127 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

2வது நாளில் இரட்டை சதம் நோக்கி

2வது நாளில் இரட்டை சதம் நோக்கி

இரண்டாவது நாளான இன்றும் ரோஹித் சர்மாவின் வேட்டை தொடர்ந்தது. 150 ரன்களைக் கடந்து 177 ரன்கள் எடுத்து இரட்டை சதம் நோக்கி பயணித்தார். ஆனால் அவர் அவுட் ஆனார். முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 453 ரன்களைக் குவித்தது.

2வது இன்னிங்ஸில் மிரட்டிய ஷமி

2வது இன்னிங்ஸில் மிரட்டிய ஷமி

இதையடுத்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஷமியின் மிரட்டலான பந்துவீச்சுக்கு அடிபணிந்தே போனது.

5 விக்கெட்டுகள்

5 விக்கெட்டுகள்

13.1 ஓவர்கள் வீசிய ஷமி 47 ரன்கள் கொடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் 5 விக்கெட்டுகளை அள்ளி அதிரடி காட்டினார் ஷமி. ஷமியின் அபார பந்துவீச்சு இந்தியாவுக்கு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வெற்றியை தேடித் தந்தது.

ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா

ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா

இதேபோல் அறிமுக போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை ரோஹித் சர்மா பெற்றதும் சிறப்புக்குரியதாக இருந்தது.

Story first published: Friday, November 8, 2013, 17:55 [IST]
Other articles published on Nov 8, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+