Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK VS MI - தோனிக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. CSK அணியில் 2 முக்கிய வீரர்கள் இல்லை.. ஆர்ச்சரும் காயம்

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய முக்கிய ஆட்டத்தில் சிஎஸ்கே அணிகளும், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார். கடைசியாக இவ்விரு அணிகளும் விளையாடிய 7 போட்டிகளில் யார் டாஸ் வென்றார்களோ, அவர்களே வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது குடிறப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் மோயின் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியர் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் மற்றும் ரஹானே ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிசாண்டாவுக்கு தோனி வாய்ப்பி வழங்கி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ஹங்கர்கேகர் இம்பேக்ட் வீரராக களமிறங்க கூடும்.

 IPL - 2 Main players in the csk and MI Jofra archer misses out today game

இதே போன்று மும்பை அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இல்லை. எனினும் அவருக்கு காயம் ஏற்படவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதே போன்று தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டப்ஸ் மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.

சிஎஸ்கே பிளேயிங் லெவன் 1, ருதுராஜ், 2, கான்வே, 3, ரஹானே, 4, ஜடேஜா, 5, தோனி, 6, சிவம் துபே, 7, தீபக் சாஹர், 8, பிரிட்டோரியஸ், 9, சிசாண்டா மகாலா, 10, தேஷ்பாண்டே, 11, மிட்செல் சாண்ட்னர்.

மும்பை பிளேயிங் லெவன் 1, இஷான் கிஷன், 2, ரோகித் சர்மா,3, கேமிரான் கிரின், 4, திலக் வர்மா, 5, சூர்யகுமார் யாதவ்,6, ஸ்டப்ஸ், 7, டிம் டேவிட், 8,அர்ஷத் கான், 9, ஹிர்திக் சோகின், 10, ஜேசன் பெகுரண்டஃப், 11,பியூஸ் சாவ்லா

Story first published: Saturday, April 8, 2023, 19:17 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+