Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மந்தமான பந்துவீச்சு...மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ரூ12 லட்சம் அபராதம்!

பெங்களூரு: 8வது ஐ.பி.எல். போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ரூ12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் விதிக்கப்பட்டுள்ள முதல் அபராதம் இதுவாகும்.

8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் 19-வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

IPL 2015: MI captain Rohit Sharma fined Rs 12 lakh

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்களை எடுத்தது. இதனை சேஸ் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. நடப்பு ஐ.பி.எல். போட்டியில் தொடர்ச்சியாக 4 தோல்விகளை கண்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அணிக்கு இதுதான் முதல் வெற்றியாகும்.

இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்து வீசாமல் மும்பை அணி மெதுவாக பந்து வீசியது தெரிய வந்தது. இதனால் அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் விதிக்கப்படும் முதல் அபராதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 21, 2015, 9:27 [IST]
Other articles published on Apr 21, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+