For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தடை தொடர்கிறது... வான்கடே மைதானத்தில் நுழைய ஷாரூக் கானுக்கு அனுமதியில்லை!

மும்பை: வான்கடே மைதானத்தில் நுழைய தடை நீடிப்பதால், வரும் 14ம் தேதி அங்கு நடைபெற உள்ள மும்பை - கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டத்தை நேரில் பார்க்க கொல்கத்தா அணியின் சக உரிமையாளரான ஷாரூக்கானுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு மும்பை - கொல்கத்தா அணிகள் வான்கடே மைதானத்தில் விளையாடின. அப்போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அப்போது மைதானத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரியுடன் ஷாரூக்கான் மோதலில் ஈடுபட்டார். இதனால், வான்கடே மைதானத்தில் நுழைய ஷாரூக்கிற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப் பட்டது.

IPL 2015: Still no entry for Shah Rukh at Wankhede Stadium

இந்நிலையில், வரும் 14ம் தேதி மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியை நேரில் பார்க்க கொல்கத்தா அணியின் சக உரிமையாளரான ஷாரூக்கிற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஷாரூக்கான் மீதான தடை தொடர்கிறது. எனவே, அவர் வான்கடே மைதானத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்' என்றார்.

Story first published: Tuesday, May 12, 2015, 10:09 [IST]
Other articles published on May 12, 2015
English summary
For the third year running after the ruckus he had created in 2012, Bollywood actor Shah Rukh Khan will not be allowed to witness the key IPL cricket contest between his side Kolkata Knight Riders and home team Mumbai Indians at the Wankhede Stadium here on May 14.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+