ஏமாற்றினாரா வார்னர்? என்ன செய்கின்றனர் அம்பயர்கள்
மும்பை: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 10-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வார்னர் 49 ரன்களும், தவான் 47 ரன்களும் எடுத்தனர்.

இதனிடையே மும்பை அணி வீரர் பும்ரா வீசிய 6-வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட வார்னர், அந்த பந்தில் பவுண்டரி அடித்தார். தொடர்ந்து 7-வது ஓவரின் முதல் பந்தை தவான் சந்திக்க வேண்டும். ஆனால் அந்த ஓவரின் முதல் பந்தையும் வார்னரே எதிர்கொண்டார். இதை களத்தில் இருந்த இந்திய அம்பயர்கள் நிதின் மேனன், நந்தன் ஆகியோர் கண்டுகொள்ளவில்லை. டிவி அம்பயராக இருந்த பார்டேயும் இதை கவனிக்கவில்லை.
இருப்பினும் வார்னருக்கு தெரியும் நாம் மறுமுனைக்கு மாற வேண்டும் என்று இருப்பினும் இந்த தவறு எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. ஒருவேளை அம்பயர்கள் வேண்டும் என்றே இதை செய்தார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications