Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் சுமை இல்லாமல் பழைய பன்னீர்செல்வமாக களமிறங்கும் டோணி.. இன்று ஹெலிகாப்டர் பறப்பது கன்பார்ம்

புனே: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 2வது நாளான இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் புனே சூப்பர் ஜியான்ட்ஸ் அணியும் பலப் பரிட்சை நடத்த உள்ளன.

இப்போட்டியில், புனே அணியின் கேப்டன் பொறுப்பை துறந்து ஃப்ரீ பேர்ட்டாக மாறியுள்ள டோணி அதிரடி காண்பிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

மும்பை அணி ரோகித் ஷர்மா தலைமையில் பலமானதாக உள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தனது ஃபார்மை புனே அணி வெற்றிக்காக காட்டினால் இந்த போட்டி அனல் பறப்பதாக மாறும். ஸ்டீவ் ஸ்மித்தான் நடப்பு சீசனுக்காக புனே அணி கேப்டனாகும்.

சொதப்பல்

சொதப்பல்

சிஎஸ்கே கேப்டனாக ஜொலித்த டோணி, கடந்த ஆண்டு புனே அணி கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அந்த அணி 7வது இடத்தைதான் பிடித்தது.

சிஎஸ்கே கிங்

சிஎஸ்கே கிங்

பிளே ஆப் சுற்றை தாண்டாமல் வெளியே வந்ததில்லை என்று பெருமை கொண்ட சிஎஸ்கே அணியை வழிநடத்தியதை போல புனே அணியை டோணியால் வழி நடத்த முடியவில்லை. இதனால் தற்போது ஸ்மித் கேப்டனாக உள்ளார்.

ஹெலிகாப்டர்கள்

ஹெலிகாப்டர்கள்

இதை பயன்படுத்தி டோணி இன்றைய போட்டியில் வான வேடிக்கை காட்டுவார், அவரது இயல்பான ஹெலிகாப்டர் ஷாட்டுகள் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. ஏற்கனவே யுவராஜ்சிங் நேற்று தனது வான வேடிக்கையை காட்டிவிட்ட நிலையில் டோணியும் தனது திறமையை முதல் போட்டியில் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணி

மும்பை அணி

மும்பை அணிக்காக லென்டில் சிமன்ஸ், பார்திவ் பட்டேல், ரோகித் ஷர்மா, அம்பட்டி ராயுடு, ஜோஸ் பட்லர், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, ஹர்பஜன் சிங், க்ருனால் பாண்ட்யா, மிட்சேல் ஜான்சன், பும்ரா ஆகியோர் இன்று ஆட உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Thursday, April 6, 2017, 15:32 [IST]
Other articles published on Apr 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+