Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10வது ஐபில்: ஸ்மித், ரகானே அதிரடியால் புனே அணிக்கு முதல் வெற்றி!

புனே: ஐ.பி.எல். லீக் 2வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புனே அணி வெற்றி பெற்றது.

ரைசிங் புனே சூப்பர் செயிண்ட் அணிக்கு எதிரான ஐபிஎல் 10 வது சீசன் 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே அணி களமிறங்க உள்ளது.

CMS Article Management

ஐபிஎல் கிரிக்கெட் 10 வது தொடரில் இன்று நடைபெறவுள்ள 2வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ரைஸிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. புனேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாசில் வென்ற புனே அணி கேப்டன் ஸ்மித் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து மும்பை அணிக்கு பார்த்திவ் பட்டேல் மற்றும் ஜோஸ் பட்லர் துவக்கம் தந்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 19 ரன்கள் எடுத்தபோது பார்த்திவ் பட்டேல் இம்ரான் தாகீர் பந்துவீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆகி நடையை கட்டினார். இதன் பின்னர் 3-வது வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 3 ரன்னில் ஏமாற்றம் தந்தார்.

அதிரடியாக ஆடிய பட்லர் 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து இம்ரான் தாகீர் பந்துவீச்சில் அவுட் ஆகினார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 28 பந்தில் 34 ரன்களிலும், அம்பாதி ராயுடு 10 ரன்களிலும் வெளியேறினேர்.

இதையடுத்து ரன்வேகம் கணிசமாக குறைய கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக 4 சிக்சர், 1 பவுண்டரி என 30 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரகானே தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். 34 ரன்களில் 60 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்மித் சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால் 19 .5 ஓவரில் 187 ரன்களை எடுத்து புனே அணி வெற்றி இலக்கை எட்டியது. ஸ்மித் 54 பந்துகளில் 84 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Story first published: Friday, April 7, 2017, 5:52 [IST]
Other articles published on Apr 7, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+