For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பஞ்சாபை புரட்டி எடுத்த மும்பை இந்தியன்ஸ்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

By Karthikeyan

இந்தூர்: ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் 22-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

IPL 2017: Match 22: Unchanged Mumbai win toss, opt to chase against Punjab

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிங்கிய அம்லா 60 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர் என 104 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மார்ஷ் 26 (21), சாஹா 11 (15), மேக்ஸ்வெல் 40 (18) ரன்களும் எடுத்திருந்தனர். மும்பை அணியின் சார்பில் மிட்செல் மிக்லினாகன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பட்லர் 37 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சர் என 77 ரன்களை குவித்தார். அதேபோல் அதிரடி காட்டிய ராணா 7 சிக்சர்களுடன் 34 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார்.

Story first published: Friday, April 21, 2017, 0:12 [IST]
Other articles published on Apr 21, 2017
English summary
Mumbai Indians rode on destructive half centuries from Englishman Jos Buttler and young Nitish Rana to thrash Kings XI Punjab (KXIP) by eight wickets in an Indian Premier League (IPL) 2017 match.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+