
வேறு வேறு அணிகள்
இந்திய அணிக்காக ஒன்றாக ஆடினாலும், ஐபிஎல் தொடரில் இஷாந்த் சர்மா டெல்லி அணிக்கும், ரோஹித் சர்மா மும்பை அணிக்கும் ஆடி வருகின்றனர். நேற்றைய போட்டியில் இஷாந்த் சர்மா வீசிய 3வது ஓவரில் தான் அந்த சம்பவம் நடைபெற்றது.

அடித்து ஆட வந்த ரோஹித்
ரோஹித் சர்மா, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை அடித்து ஆட முடிவு செய்து பிட்ச்சில் இறங்கி வந்தார். ஆனால், பந்தை முற்றிலுமாக தவறவிட்டார். அந்த பந்தில், எட்ஜ் ஆகி கேட்ச் போயிருக்கவும் வாய்ப்பு இருந்தது.

சிரித்து சமாளித்த ரோஹித்
ரோஹித் பந்தை தவறவிட்ட பின், இஷாந்த் சர்மா அவரைப் பார்த்து, "என் பந்தை அடிச்சு ஆட முடியுமா?" என நகைச்சுவையாக சீண்டினார். ரோஹித் சிரித்து சமாளித்தார். இஷாந்த் சர்மா கடந்த ஆண்டு முதல் பந்துவீச்சில் பெரிய அளவில் முதிர்ச்சி அடைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தல்
இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசிய இஷாந்த் சர்மா 17 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். நன்றாக பந்து வீசி இருந்தும் இஷாந்த் சர்மாவிற்கு 4 ஓவர்களையும் முழுமையாக பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.


Click it and Unblock the Notifications