Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாவுக்கு வெற்றி மேல் வெற்றி.. ஐபிஎல் தொடரில் இப்படி ஒரு சாதனையா? ராயுடு ஜஸ்ட் மிஸ்!

Recommended Video

IPL 2019 FINALS CHENNAI VS MUMBAI | 4வது முறையாக கோப்பையை வென்ற மும்பை அணி

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரில் சென்னை அணியை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது.

இந்த வெற்றி மூலம் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் இப்படி ஒரு சாதனை செய்யவில்லை. அப்படி என்ன சாதனை?

IPL 2019 MI vs CSK : Rohit Sharma becomes first player to be in 5 IPL final victory

ரோஹித் சர்மா இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பை வெற்றிகளில் இடம் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2009இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஒரு முறையும், 2013, 2015, 2017 மற்றும் 2019இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் நான்கு முறையும் ஐபிஎல் கோப்பை வென்ற அணிகளில் இடம் பிடித்த ரோஹித் சர்மா இந்த சாதனையை தன் வசமாக்கினார்.

ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இடத்தில் 4 ஐபிஎல் கோப்பை வென்ற அணிகளில் இடம் பெற்ற வீரர்கள் - அம்பதி ராயுடு, மலிங்கா, கீரான் பொல்லார்டு.

ஒருவேளை இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இருந்தால், சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு இதே சாதனையை தன் வசமாக்கி இருப்பார். ரோஹித் சர்மா பின்தங்கி இருப்பார். 1 ரன்னில் மும்பை அணி வெற்றி பெற்றதால், அந்த வாய்ப்பை இழந்தார் அம்பதி ராயுடு.

Story first published: Monday, May 13, 2019, 19:07 [IST]
Other articles published on May 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+