Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆத்தாடி.. விக்கெட் போயிடும்.. சாமர்த்தியமாக பந்தை காலால் தள்ளி.. ஃபுட் பால் ஆடிய ரோஹித் சர்மா!

மும்பை : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்தை காலால் எட்டித் தள்ளிய சம்பவம் நடந்தேறியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா - டி காக் அதிரடியாக ஆடினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இவர்கள் இருவரும் பேட்டிங் செய்து வந்த போது 10வது ஓவரை ராஜஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் கெளதம் வீசினார். அந்த ஓவரின் 2, 3, 4வது பந்துகளில் ஒரு சசிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து இருந்தார் ரோஹித். பின்னர், அந்த ஓவரின் 5வது பந்தை ரோஹித் சர்மா எதிர்கொண்டார்.

இறங்கி வந்த ரோஹித்

இறங்கி வந்த ரோஹித்

அந்த பந்து வரும் முன்னரே, ரோஹித் சில அடி தூரம் கிரீஸை விட்டு இறங்கி அடித்து ஆட வந்தார். ஆனால், கெளதம் பந்தை லெக் திசையில் அகலமாக செல்லுமாறு வீசினார். இதனால், ரோஹித்தால் பந்தை அடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஸ்டம்பிங் வாய்ப்பு

ஸ்டம்பிங் வாய்ப்பு

ஆனால், ரோஹித் சர்மா பந்தை விட்டுவிட்டால், விக்கெட் கீப்பர் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பு இருந்தது. இதை உணர்ந்த ரோஹித், சில கணங்களில் பந்தை தன் காலால் எட்டித் தள்ளினார்.

ஃபுட்-பால்

ஃபுட்-பால்

ஒருவேளை ரோஹித் சர்மா பந்தை விட்டிருந்தாலும், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பந்தை பிடித்து இருப்பது கடினமே. பந்து அந்தளவு அகலமாக சென்றது. எனினும், சாமர்த்தியமாக செயல்பட்ட ரோஹித், தன் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள பந்தை ஃபுட்-பால் போல தள்ளினார்.

ரோஹித் சிறப்பான ஆட்டம்

ரோஹித் சிறப்பான ஆட்டம்

ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் 32 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். கடந்த ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவிக்கத் திணறிய ரோஹித் சர்மா, இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ரன் குவித்தார்.

Story first published: Saturday, April 13, 2019, 19:21 [IST]
Other articles published on Apr 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+