Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாவுக்கு காலில் காயமா? உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பரபரக்கும் செய்தி!!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியின் போது காயமடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க, வலைப் பயிற்சியில் ஈடுபட்டார் ரோஹித் சர்மா. உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ள நிலையில் ரோஹித்தின் காயம் குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரோஹித் சர்மா காயம்

ரோஹித் சர்மா காயம்

இந்தியா டுடேவில் வெளியாகி உள்ள செய்தியில், ரோஹித் சர்மா பயிற்சியின் போது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும், வலியால் துடித்து தன் தலையைப் பிடித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுக்கவில்லை

மறுக்கவில்லை

இந்த காயத்தின் வீரியம் குறித்து எந்த செய்தியும் தெரியவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் பங்கேற்பாரா? என்பதும் உறுதியாக தெரியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் இந்த செய்திக்கு இன்னும் மறுப்பு வெளியாகவில்லை.

நடந்த சென்ற ரோஹித்

நடந்த சென்ற ரோஹித்

அதே சமயம், ரோஹித் சர்மா பிசியோதெரபிஸ்ட் அளித்த முதல் உதவிக்கு பின் தானே அறைக்கு நடந்து சென்றார் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஐபிஎல் தொடரைக் காட்டிலும், உலகக்கோப்பை தொடரை இந்த காயம் பாதிக்குமா? என்ற கோணத்தில் ரசிகர்கள் கவலையடைந்து இருக்கிறார்கள். உலகக்கோப்பைக்கு முன்னாடி ஐபிஎல் தேவையா? என்றும் சிலர் பங்கி வருகின்றனர்.

ஆலோசனை

ஆலோசனை

உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்பட உள்ளது. ரோஹித் சர்மா தற்போது காயமடைந்து இருந்தாலும், அவர் இந்திய அணியில் இடம் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. எனினும், தேர்வாளர்கள் மாற்று ஏற்பாடு குறித்தும் தீவிரமாக ஆலோசனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகளுக்கு அழுத்தம்

அணிகளுக்கு அழுத்தம்

ஏற்கனவே, பும்ரா முதல் போட்டியில் காயமடைந்து அதில் இருந்து மீண்டார். தற்போது ரோஹித் சர்மாவும் காயமடைந்து உள்ளதால் உலகக்கோப்பையில் ஆடவுள்ள இந்திய அணி வீரர்களை ஐபிஎல் தொடரில் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் அணிகள் தள்ளப்பட வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, April 10, 2019, 15:21 [IST]
Other articles published on Apr 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+