Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் சொன்ன டாஸ் யோசனை.. வெற்றி பெற்ற மும்பை.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற்ற 34வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் ஆடுகளத்துக்குள் வந்ததாக தெரிய வந்துள்ளது. அதன் பின் அவர் அளித்த யோசனையின் படி செயல்பட்ட மும்பை, வெற்றி பெற்றுள்ளது.

சச்சின் மும்பை அணியின் ஆலோசகராக இருந்தாலும், இந்த சீசனில் இதுவரை ஆடுகளத்துக்குள் வரவில்லை. அப்புறம் ஏன் இப்போது வந்தார்? என்ன ஆலோசனை சொன்னார்?

கோட்லா மைதானம்

கோட்லா மைதானம்

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்து வருகிறது. மேலும், போட்டிக்கு போட்டி, மந்தமான ஆடுகளமாக மாறி வருகிறது.

குழப்பம்

குழப்பம்

டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூட தன் அனுபவத்தால் அந்த ஆடுகளத்தின் தன்மையை கணிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்த சூழ்நிலையில், மும்பை அணி டாஸ் வென்றால் என்ன தேர்வு செய்வது என்பது குறித்த குழப்பம் இருந்துள்ளது.

சச்சின் பரிசோதனை

எனவே, ஆடுகளத்தின் தன்மையை பரிசோதிக்க சச்சினே களமிறங்கினார். போட்டிக்கு முன் மைதானத்தின் உள்ளே நுழைந்த சச்சின், ஆடுகளத்தின் அருகே நின்று கை வைத்துப் பார்த்தார். பின்னர், முழுவதுமாக பரிசோதித்து சென்றார்.

வியப்பு

வியப்பு

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதைக் கண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தன் வியப்பை தெரிவித்தார். இந்த ஆடுகளத்தில் இவர்கள் ஏன் பேட்டிங் தேர்வு செய்கிறார்கள் என்ற தன் கருத்தை கூறினார்.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

ஆனால், மும்பை அணி கடைசி மூன்று ஓவர்களில் அதிரடி காட்டி ரன்கள் குவித்தது. பந்துவீச்சிலும் கலக்கி, டெல்லி அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சச்சின் தான் இந்த வெற்றிக்கு பின்னே இருக்கிறார். எப்படி?

சச்சின் யோசனை

சச்சின் யோசனை

சச்சின் ஆடுகளத்தை பரிசோதித்த பின்னர், டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்ய சொன்னதாக தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் வெற்றியும் பெற்றது.

Story first published: Friday, April 19, 2019, 22:02 [IST]
Other articles published on Apr 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+