Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லிஸ்ட் ரெடி.. வெளியேறுவது வாட்சன் மட்டுமல்ல.. வரிசைக்கட்டும் பல வீரர்கள்.. சிஎஸ்கேவில் களையெடுப்பு!

துபாய்: சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் வாட்சன் தற்போது அனைத்து விதமான லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. 4 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பெங்களூர் பிளே ஆப் செல்கிறது.

எல்லா வருடமும் பிளே ஆப் சென்ற சென்னை அணி இந்த முறை பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. இப்படி வரிசையாக இந்த தொடரில் நினைத்து பார்க்க முடியாத பல சம்பவங்கள் நடந்துள்ளது. மோசமான பேட்டிங் காரணமாக சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

ஓய்வு

ஓய்வு

இந்த முறை சிஎஸ்கே அணிக்காக ஆடிய மூத்த வீரர்கள் யாருமே சரியாக பேட்டிங் செய்யவில்லை. வாட்சன், ஜாதவ், தோனி, பிராவோ என்று முக்கிய வீரர்கள் எல்லோரும் பார்ம் அவுட் காரணமாக கஷ்டப்பட்டனர். இதனால் தொடக்கத்தில் நடந்த பெரும்பாலான போட்டிகளில் சிஎஸ்கே அணி வரிசையாக தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

இந்த நிலையில்தான் பார்ம் அவுட் காரணமாக கஷ்டப்பட்டு வந்த வாட்சன் ஓய்வு முடிவை எடுத்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். ஐபிஎல் மட்டுமல்லாமல் அனைத்து விதமான லீக் போட்டிகளில் இருந்தும் வாட்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

என்ன முடிவு

என்ன முடிவு

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடும் இன்னும் சில வீரர்களும் ஓய்வு பெற போகிறார்கள் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியில் ஓய்வு முடிவை எடுத்துள்ள வீரர்கள் யார் என்ற லிஸ்ட் ஏற்கனவே தயார் ஆகியுள்ளது என்கிறார்கள். விரைவில் ஒவ்வொரு வீரராக தங்கள் ஓய்வு முடிவை அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

ஹர்பஜன், ஜாதவ், சாவ்லா ஆகியோர் கண்டிப்பாக ஓய்வு பெற வாய்ப்புள்ள வீரர்கள் என்று கூறப்படுகிறது. பிராவோ தொடர்ந்து சிபிஎல், ஐபிஎல் இரண்டிலும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் இவரும் கூட பிட்னஸ் காரணமாக முன்கூட்டியே ஓய்வு முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் சிஎஸ்கே அணியில் வரிசையாக பலர் வெளியேற வாய்ப்புள்ளது.

எடுக்காத வீரர்கள்

எடுக்காத வீரர்கள்

இந்த சீசனில் ஆடிய ராயுடு, டு பிளசிஸ் ஆகியோர் அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணிக்கு ஆட திட்டமிட்டுள்ளனர். இதனால் அவர்கள் ஓய்வு பெற போவது இல்லை. இன்னும் சில மாதங்களில் அடுத்த சீசன் நடக்கும் என்பதால்.. தாஹிரும் அடுத்த சீசனில் ஆடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

Story first published: Tuesday, November 3, 2020, 9:12 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+