Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவமானங்கள்.. விமர்சனங்கள்.. களத்தில் சொல்லி சொல்லி அடித்த ராயுடு..யாருக்கு அனுப்பிய மெசேஜ் தெரியுமா?

சென்னை: இன்று மும்பைக்கு எதிரான போட்டியில் தனது அதிரடி ஆட்டம் மூலமா அம்பதி ராயுடு முக்கிய மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார்.

இன்று சென்னைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய சென்னை வரிசையாக அடுத்தடுத்து இரண்டு ஓப்பனிங் வீரர்களை இழந்தது.

வாட்சன், முரளி விஜய் இருவரும் விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் அதன்பின் வந்த அம்பதி ராயுடு, டு பிளசிஸ் இருவரும் மிகவும் பொறுமையாக அடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

செம

செம

முதலில் மெதுவாக ஆடினாலும் போக போக அம்பதி ராயுடு வேகம் காட்டதொடங்கினார். தேவையான பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி என்று அடித்து அதிரடி காட்டினார். வேகமாக ஆட தொடங்கிய ராயுடு இந்த தொடரின் முதல் வீரராக 50 ரன்களைகடந்து 71 ரன்களை எடுத்தார். மிகவும் கடுமையான பிட்சில், வலிமையான பவுலர்களை எதிர்கொண்டு, அம்பதி ராயுடு கலக்கினார்.

எப்படி ஆடினார்

எப்படி ஆடினார்

அதிலும் இவர் பார்ம் அவுட்டில் இருக்கிறார். சரியாக ஆட மாட்டார் என்று இவருக்கு எதிராக நிறைய கணிப்புகள் வைக்கப்பட்டது. ஆனால் அம்பதி ராயுடு எதையும் கருத்தில் கொள்ளாமல் கவலையே இன்றி களத்தில் நிதானமாக ஆடினார். இதன் மூலம் தனக்கு எதிரான சில விமர்சனங்களுக்கு இவர் பதிலடி கொடுத்துள்ளார்.

என்ன பதிலடி

என்ன பதிலடி

கடந்த உலகக் கோப்பை தொடரில் இவர், தன்னை அணியில் எடுக்கவில்லை என்று கடுமையாக புகார்களை வைத்தார். விஜய் சங்கர் போன்றஅனுபவம் இல்லாத வீரர்களை அணியில் எடுத்ததை இவர் கிண்டல் செய்து இருந்தார். ஆனால் இவருக்கு எதிராக தேர்வு கமிட்டி கடுமையாக புகார்களை குவித்து, விமர்சனங்களை வைத்தது.

ஓய்வு அறிவித்தார்

ஓய்வு அறிவித்தார்

விஜய் சங்கரை 3டி வீரர் என்று அம்பதி ராயுடு கிண்டல் செய்து இருந்த நிகழ்வும் நடந்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர் புறக்கணிப்பு காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூட அம்பதி ராயுடு அறிவித்தார். அதன்பின் மீண்டும் ஓய்வில் இருந்து திரும்பி வந்தார். ஆனால் இவருக்கு அணியில் யாரும் வாய்ப்பு கொடுக்கவே இல்லை.

பதிலடி

பதிலடி

இந்திய அணியில் நான்காவது இடத்தில் விளையாட வேண்டும் என்பதுதான் இவரின் ஒரே நோக்கம். அந்த இடத்திற்கு நான்தான் சரியான ஆள்என்பதை இன்றைய போட்டியின் மூலம் ராயுடு நிரூபித்து இருக்கிறார் . தனக்கு எதிரான விமர்சனங்கள், தேர்வு குழுவின் அவமானங்களுக்கு எல்லாம் ஒரே போட்டியில் ராயுடு பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Saturday, September 19, 2020, 23:39 [IST]
Other articles published on Sep 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+