Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளியேறுகிறது சிஎஸ்கே.. இனி இந்த டீம்தான் ராஜா.. கோப்பை வெல்ல வாய்ப்புள்ள ஒரு அணி.. அதிரடி கணிப்பு!

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்து உள்ளது. இதன் காரணமாக எந்த நான்கு அணிகள் பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது என கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களே இந்த சீசன் முடிய உள்ளது.

இந்த சீசனில் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 8 போட்டிகளில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்து உள்ளது.

வாய்ப்பு என்ன

வாய்ப்பு என்ன

இந்த தொடர் தோல்விகள் காரணமாக சிஎஸ்கே மோசமாக துவண்டு போய் உள்ளது. சிஎஸ்கேவின் சரிவு மற்ற அணிகளுக்கு பிளே ஆப் வாய்ப்பை அதிகரித்து உள்ளது.10 போட்டிகளில் ஆடி உள்ள கொல்கத்தா 5 போட்டிகளில் வென்று நான்காவது இடத்தில் உள்ளது. இதனால் கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் செல்ல அதிகம் வாய்ப்பு உள்ளது.

எப்படி

எப்படி

ஆனால் கொல்கத்தா அணியில் சுனில் நரேன், ரசல் ஆட முடியாத நிலையில் உள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் இல்லாமல் கொல்கத்தா சொதப்புவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை கொல்கத்தா சொதப்பினால் கண்டிப்பாக பஞ்சாப் அணி பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது. ஹைதராபாத் அணிக்கு வாய்ப்பு இருந்தாலும்.. முக்கியமான அணிகளை இனிதான் ஹைதராபாத் எதிர்கொள்ள உள்ளது.

முக்கியமான அணிகள்

முக்கியமான அணிகள்

ஹைதராபாத் இனி வரும் போட்டிகளில் பெரிய அணிகளை எதிர்கொள்ள இருப்பதால் பிளே ஆப் செல்வது சந்தேகம் என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் பெங்களூர், டெல்லி, மும்பை அணிகள் பிளே ஆப் செல்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதில் கோப்பையை வெல்ல போகும் அணி எதுவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கணித்து உள்ளனர்.

அணி எது

அணி எது

அதன்படி பெங்களூர் அல்லது டெல்லி அணி இந்த முறை கோப்பையை வெல்லலாம். டெல்லிக்கும் பெங்களூருக்கும் இடையே பைனல் நடக்க வாய்ப்புள்ளது. அதில் பெங்களூர் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஷேன் வார்னே போன்றவர்கள் டெல்லி அணி பைனல் போக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.

ராஜா

ராஜா

பெங்களூர் அணி கோப்பை வெல்ல வாய்ப்புள்ளது என்று முன்னாள் இந்திய மாவீரர் பிரக்யான் ஓஜா போன்றவர்கள் கணித்துள்ளனர். அதேபோல் சிஎஸ்கே வெளியேறி உள்ளதால் தென்னிந்தியர்கள் பலர் இந்த முறை பெங்களூருக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது. ஹைதராபாத்தும் சரியாக ஆடாத காரணத்தால் பெங்களூருக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

Story first published: Saturday, October 24, 2020, 13:21 [IST]
Other articles published on Oct 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+