For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொத்தமாக 7 மாற்றம்.. அதிரடியாக தூக்கி அடிக்கப்பட்ட இளம் வீரர்கள்.. பிசிசிஐ எடுத்த திடீர் முடிவு!

துபாய்: ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் 7 முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒருநாள், டெஸ்ட், டி 20 தொடர் நடக்க உள்ளது.

இரண்டு நாடுகளும் இந்த தொடருக்கான அணியை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் ஐபிஎல் மூலம் வாய்ப்பு பெற்று உள்ளனர்.

ஐபிஎல்

ஐபிஎல்

இந்த நிலையில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இன்று 7 முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடுவார். இவருக்கும் அனுஷ்கா சர்மாவிற்கும் குழந்தை பிறக்க உள்ளதால் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் இந்தியா திரும்பி விடுவார்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா குறித்தும் இதில் முக்கியமான அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரோஹித் சர்மா இந்திய அணியின் ஒருநாள் மட்டும் டி 20 அணிகளில் ஆட மாட்டார். மாறாக இவர் டெஸ்ட் தொடரில் ஆடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோலிக்கு மாற்றாக அணியில் இவர் இடம்பெறுவார்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

அதேபோல் இந்திய அணியின் ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் கூடுதல் விக்கெட் கீப்பராக இணைந்துள்ளார். கே. எல் ராகுல் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக உள்ள நிலையில் சஞ்சு சாம்சன் கூடுதல் விக்கெட் கீப்பராக இணைந்துள்ளார். அதேபோல் காயத்தால் அவதிப்பட்டு வரும் இஷாந்த் சர்மா.. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

வருண்

வருண்

இந்திய அணியில் இருந்து இளம் வீரர் வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சாஹா

சாஹா

அதேபோல் இந்திய அணியில் சாஹா இடம்பெறுவதும் சந்தேகம் ஆகியுள்ளது. இவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

கமலேஷ் நாகர்கோட்டி

கமலேஷ் நாகர்கோட்டி

அதேபோல் இளம் வீரர் கமலேஷ் நாகர்கோட்டி இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவருக்கு காயம் இல்லை. ஆனால் இவரின் உடல்நிலை பவுலிங் செய்ய ஒத்துழைக்கவில்லை என்று வித்தியாசமான காரணம் சொல்லப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்திய அணியில் செய்யப்பட உள்ள 7 அப்டேட்கள் குறித்து இன்று பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Story first published: Monday, November 9, 2020, 17:27 [IST]
Other articles published on Nov 9, 2020
English summary
IPL 2020: BCCI gave 7 new updates on Team India for Aussie series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+