Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நினைத்ததை விட மோசம்.. ரோஹித் சர்மாவிற்கு என்ன ஆச்சு.. நாளை முடிவு செய்யும் பிசிசிஐ.. முழு பின்னணி!

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் உடல்நிலையை நாளை பிசிசிஐ மருத்துவக்குழு சோதனை செய்ய உள்ளது.

மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்துள்ளது. இன்று மும்பை அணியில் ரோஹித் சர்மா மீண்டும் ஆடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. இன்று ரோஹித் சர்மா அணியில் இடம்பெறவில்லை.

இன்று ஆடுவாரா?

இன்று ஆடுவாரா?

இன்றும் பொல்லார்ட்தான் மும்பை கேப்டனாக இருப்பார். இன்று மும்பை அணியில் ரோஹித் சர்மா ஆடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் காயம் மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு முட்டிக்கு அருகில் காயம் ஏற்பட்டுள்ளது.

நினைத்ததை விட மோசம்

நினைத்ததை விட மோசம்

அதிலும் இவருக்கு இருக்கும் காயம் நினைத்ததை விட மோசமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். தொடக்கத்தில் இவருக்கு ஏற்பட்டதாக கருதப்படும் காயத்தை விட இப்போது இருக்கும் காயம் இன்னும் மோசமாக உள்ளது என்கிறார்கள். இவரின் காயம் தொடர்பாக இரண்டு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டது.

இரண்டு ரிப்போர்ட்

இரண்டு ரிப்போர்ட்

இந்த இரண்டு ரிப்போர்ட்டிலும் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அவசியம் , அவர் ஆஸ்திரேலிய தொடரில் ஆட கூடாது என்றுதான் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை பிசிசிஐ மருத்துவ குழு ரோஹித் சர்மாவை சோதனை செய்ய உள்ளது. அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடரலாமா கூடாதா என்பதை நாளை முடிவு செய்வார்கள்.

வாய்ப்பு

வாய்ப்பு

அதன்படி நாளை சோதனைக்கு பின் பெரும்பாலும் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது என்கிறார்கள். அல்லது வெளியேறாமல் இப்படியே ஆடும் அணியில் இடம்பெறாமல் நீடிப்பார். அணிக்கு ஆலோசனை மட்டும் வழங்குவார்.

எத்தனை

எத்தனை

மேலும் இவர் இந்தியா திரும்பி சிகிச்சை முடித்து வாய்ப்பு இருந்தால் ஆஸ்திரேலிய தொடரில் ஆட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. நாளை செய்யப்படும் மருத்துவ சோதனையில் முடிவுகள் தெரிய வரும்.

Story first published: Saturday, October 31, 2020, 15:24 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+