Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு பிளான்.. மும்பை டீமிடம் பேசிய பிராவோ.. சிஎஸ்கே எதிர்காலம் காலியானது அங்குதான்.. பின்னணி

துபாய்: மும்பை அணியில் ரோஹித் சர்மா இல்லாமலே நேற்று சிஎஸ்கேவை அந்த அணி மிக எளிமையாக வீழ்த்தி இருக்கிறது. இதற்கு அந்த அணியின் கேப்டன் கைரன் பொல்லார்ட் மிக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி எளிதாக வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்து இருக்கிறது. இந்த சீசனில் இனி மீதம் இருக்கும் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்று மானத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது. 20 ஓவரில் 114 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய மும்பை அணி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் எளிதாக 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

எப்படி

எப்படி

நேற்று சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக பேட்டிங் செய்யவில்லை. சாம் கரன் மட்டுமே நேற்று அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் நேற்று 15 ரன்களை கூட தாண்டவில்லை. சிஎஸ்கேவின் தோல்விக்கு இந்த மோசமான பேட்டிங் முக்கியமான காரணமாக இருந்தது. இன்னொரு பக்கம் பொல்லார்ட் நேற்று மிக சிறப்பாக கேப்டன்சி செய்தார்.

கேப்டன்சி

கேப்டன்சி

நேற்று ரோஹித் இல்லையென்றாலும் பொல்லார்ட் மிக சிறப்பாக கேப்டன்சி செய்தார். சரியான பவுலிங் ரொட்டேஷன், பேட்டிங் ஆர்டர் , பீல்டிங் செட்டப் என்று பொல்லார்ட் நேற்று கலக்கினார். இரண்டாவது ஓவர் பும்ராவை போட வைத்தது எல்லாம் யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட். இங்குதான் சிஎஸ்கே மொத்தமாக சறுக்கியது.

சறுக்கியது

சறுக்கியது

சிபிஎல் போன்ற போட்டிகளில் சிறப்பாக கேப்டன்சி செய்த பொல்லார்ட் நேற்று தனது கேப்டன்சியை நிரூபித்தார். பொல்லார்ட்தான் தற்போது உலகிலேயே நம்பர் 1 டி20 கேப்டன். உலகிலேயே அதிக டி20 போட்டிகளில் வென்ற கேப்டன் என்று பெயர் பொல்லார்டுக்குதான் இருக்கிறது. பல்வேறு லீக் ஆட்டம் உட்பட 299 டி20 போட்டிகளில் பொல்லார்ட் கேப்டனாக வென்று இருக்கிறார்.

செம

செம

மும்பை அணி ஒவ்வொரு முறை சறுக்கும் போது பொல்லார்ட்தான் அந்த அணிக்கு கை கொடுக்கிறார். தோனிக்கு ரெய்னா போல ரோஹித்திற்கு பொல்லார்ட் செயல்படுகிறார். ஆனால் இந்த பொல்லார்ட் மும்பை அணிக்கு செல்லவே பிராவோதான் காரணம். ஆம் 2010 வரை பிராவோ மும்பை அணியில்தான் இருந்தார். அந்த வருடம் பிராவோ மும்பை அணியில் இருந்து வெளியேறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதன் காரணமாக அவருக்கு ஒரு மாற்று வீரரை மும்பை அணி தேடியது. ரசல் அல்லது கெயில் ஆகியோரை அணியில் எடுக்கவே மும்பை நினைத்தது. பொல்லார்ட் மற்றும் பிராவோவை அணியில் எடுக்க சிஎஸ்கே நினைத்தது. ஆனால் சிஎஸ்கேவின் திட்டம் தெரியாமல், பிராவோதான் மும்பை அணிக்கு பொல்லார்டை பரிந்துரை செய்தார் .பொல்லார்டை அணியில் எனக்கு மாற்றாக எடுங்கள் என்று பிராவோதான் மும்பைக்கு ஐடியா கொடுத்தார்.

பரிந்துரை

பரிந்துரை

இந்த பரிந்துரைதான் மொத்தமாக மும்பை அணியின் எதிர்காலத்தை புரட்டி போட்டது. 2011 ஏலத்தில் பொல்லார்டை அணியில் எடுக்க சிஎஸ்கே தீவிரமாக முயன்றது. ஆனால் மும்பை அணி கொஞ்சம் கூட பொல்லார்டை விட்டு கொடுக்கவில்லை. பிராவோ சொன்னதை நம்பி அவரை கஷ்டப்பட்டு மும்பை அணியில் எடுத்தது.

எதிர்காலம்

எதிர்காலம்

அந்த ஒரு முடிவு தற்போது மும்பையின் எதிர்காலத்தை மாற்றி உள்ளது. பிராவோ அன்று பரிந்துரை செய்யவில்லை என்றால் மும்பை பொல்லார்ட் மீது இவ்வளவு ஆர்வம் காட்டி இருக்காது. சிஎஸ்கேவும் கூட பொல்லார்டை வாங்கியிருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். சிஎஸ்கே பெரிய எதிர்காலத்தை அன்று இழந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 24, 2020, 12:38 [IST]
Other articles published on Oct 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+