வசமாக சிக்கிய சிஎஸ்கே.. 2 வருடமாக சென்னையை விடாமல் துரத்தும் பிரச்சனை.. என்ன செய்ய போகிறார் தோனி?
சென்னை: சிஎஸ்கே அணியில் கடந்த 2 வருடமாக இருந்த பிரச்சனை இந்த வருடமும் தொடர்ந்து நீடித்து வருகிறது. 2018ல் இருந்து சென்னையை ஒரே பிரச்சனை துரத்தி வருகிறது.
சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. ஸ்பின் பவுலிங் பிட்ச்சான அபுதாபியில் போட்டி நடந்தது.
பவுலிங் பிட்ச் என்பதால் இரண்டு அணியிலும் பேட்டிங் சொதப்பி வருகிறது. 20 ஓவரில் மும்பை அணி 9 விக்கெட்டிற்கு 162 ரன்களை மும்பை அணி குவித்தது. இதில் சென்னை வெற்றிபெற்றாலும் சென்னைக்கு சில பின்னடைவும் உள்ளது.

சென்னை பேட்டிங்
இதன் பின் சென்னை அணி பேட்டிங் இறங்கிய நிலையில், வரிசையாக சென்னையின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். களத்திற்கு வந்து சில நிமிடத்தில் வாட்சன் அவுட்டானார். அதன்பின் முரளி விஜய் அவுட்டானார். வரிசையாக இரண்டு ஒப்பனர்களும் அவுட்டானார்கள். இதனால் சென்னை அணி பெரிய அதிர்ச்சியை சந்தித்தது.

அடுத்து என்ன
அதன்பின் இறங்கிய ராயுடு, டு பிளசிஸ் இருவரும் அதிரடி காட்டாமல் மிகவும் பொறுமையாக ஆடினார்கள். 5 ஓவர் முடிவில் கூட சென்னை அணி 23 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. சென்னை ரன் ரெட் 8க்கும் அதிகம் தேவை என்ற நிலையில் சென்னையின் ரன் ரேட் 5க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் சென்னைக்கு இது இப்போது மட்டும் நடக்கவில்லை. கடந்த இரண்டு வருடமாகவே சென்னையின் நிலை இதுதான்.

நிலை என்ன
ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே மீண்டு வந்ததில் இருந்தே டாப் ஆர்டர் இப்படிதான் இருந்தது. 2018 சீசனில் ஓப்பனிங் வீரர்கள் இருவரும் சரியாக விளையாடவில்லை. அந்த சீசனில் அம்பதி ராயுடுதான் இடம் மாறி மாறி விளையாடி அணியை காப்பாற்றினார். கடைசியில் வந்து பிராவோ அதிரடி காட்டி சிஎஸ்கே வெற்றிக்கு காரணமாக இருந்தார். அதன்பின் 2019 சீசனில் ரெய்னா வரை யாருமே சரியாக விளையாடவில்லை.

டாப் ஆர்டர் மோசம்
2019 சீசனிலும் சென்னையின் டாப் ஆர்டர் மோசாமாகவே இருந்தது. கடைசியில் வந்து தோனி, ஜடேஜா போன்ற வீரர்களே அணியை காப்பாற்றினார்கள். டாப் ஆர்டர் வீரர்கள் ஓவர்களை குடித்துவிட்டு, ரன் எடுக்காமல் போனதால் கடைசியில் வரும் வீரர்கள் அதிக பிரஷருக்கு உள்ளானார்கள். இதனால்தான் சென்னையின் போட்டிகள் எல்லாம் எப்போதும் கடைசி வரை திரில்லாக இருந்தது.

தற்போதும் அதே நிலை
ஏதாவது சில போட்டியில் மட்டுமே சென்னைக்கு ஓப்பனிங் வெற்றிகரமாக அமைந்தது. தற்போதும் அதேபோல் தான் சென்னையில் ஓப்பனிங் வீரர்கள் சொதப்பி உள்ளனர். இதனால் இனி வரும் வீரர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும். சென்னை அடுத்தடுத்த போட்டிகளுக்கு முன் தனது ஓப்பனிங்கில் இருக்கும் குறைபாட்டை களைய வேண்டும். இல்லையென்றால் சென்னையின் எதிர்கால போட்டிகள் இன்னும் டஃப்பாக இருக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications